விகாராதிபதி தம்புள்ள பள்ளிவாசலை நோக்கி வந்ததும் - அமைச்சர் ஹக்கீமின் உடனடி நடவடிக்கையும்



ங்கிரி தம்புள்ள ரஜமஹா விகாராதிபதி இனாமலுவே சுமங்கல தேரர் மீண்டும் தேரர்கள் சிலருடனும், நாற்பது பொலிஸாரும் புடைசூழ அங்குள்ள பள்ளிவாசலை தகர்க்கும் நோக்கத்துடன் செவ்வாய்க்கிழமை (06) வந்த பொழுது, பெகோ கனரக வாகனம் பாதை விஸ்தரிப்பில் ஈடுபட்டிருந்தது.
பதற்றம் நிலவிய சூழ்நிலையில் பள்ளிவாசல் நிருவாகிகள் ஊடாக அரசியல் பிரமுகர்கள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் உண்மை நிலைமையை அறிந்து கொள்வதில் ஆர்வம் செலுத்தினர். 

கலேவலை பிரதேச சபை உறுப்பினர் நிஜாமுதீன் உடனடியாக முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீமின் ஊடக ஆலோசகரைத் தொடர்பு கொண்டார். தொடர்ந்து கலேவலை மு.கா முக்கியஸ்தரும், நீதியமைச்சரின் இணைப்பாளருமான வீ.எம். மௌபீத் அமைச்சரின் ஊடகச் செயலாளருடன் தொடர்பை ஏற்படுத்தி, பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபை உறுப்பினர் சலீம்தீனோடு உடனடியாகத் தொடர்பு கொள்ளுமாறு கூறினார். அவ்வாறே நடந்தது. 

நிலைமையை கேட்டறிந்த பின்னர், அமைச்சர் ஹக்கீம் பொஸ்வானாவில் பொதுநலவாய நீதியமைச்சர்களின் மாநாட்டில் கலந்து கொண்டிருப்பதால், அங்கு தகவல் அனுப்பப்பட்டது. அமைச்சரின் பணிப்புரைப்புரையின் படி உடனடியாக மு.கா பாராளுமன்ற உறுப்பினர்களான எச்.எம்.எம். ஹரீஸ், எம்.எஸ். தௌபீக், முத்தலீப் பாவா பாரூக் ஆகியோருக்கு இந்த விடயம் பற்றி தெரிவிக்கப்பட்டது. சவூதி அரேபிய குழுவினருடன் இருப்பதால் உடனடியாகச் செல்வது சாத்தியமில்லையென தௌபீக் எம்.பி. கூறினார். 

ஹரீஸ், எம்.பியும், முத்தலீப் பாவா பாரூக், எம்.பியும் அங்கு செல்வதாக கூறினர். அஸ்லாம், எம்.பியினதும், அமைச்சர் தவிசாளர் பஷீர் சேகுதாவூதினதும் தொலைபேசிகள் அலறி ஓய்ந்தன. அமைச்சர் பஷீர் சேகுதாவூத் அப்பொழுது கண்டியில் இருப்பதாக தெரியவந்தது.
இதற்கிடையில் தம்புள்ளை விகாராதிபதி பள்ளிவாசலை நோக்கி வந்து, நிருவாகிகளுடனும், அங்கு வசிப்பவர்களுடனும் வாக்குவாதப்பட்ட போது கைத்தொலைப்பேசியின் ஊடாக பதிவு செய்யப்பட்ட காணொளி காட்சிகள் அமைச்சர் ஹக்கீமின் ஊடகச் செயலாளருக்கு மின் அஞ்சலில் அனுப்பி வைக்கப்பட்டிருந்தன. அவை உடனடியாகவே அமைச்சரினதும், அமைச்சருடன் அங்கு சென்றிருந்த அவரது சட்ட ஆலோசகர் எம்.எச்.எம். சல்மானினதும் மின் அஞ்சல் முகவரிகளுக்கு மீள அனுப்பப்பட்டன. அதனடிப்படையில் இலங்கையில் உள்ள சட்டத்தரணி ஒருவர் தொடர்பு கொள்ளப்பட்டார். 

பள்ளிவாசல் நிருவாகிகளுடன் மு.கா தலைவரின் ஊடக ஆலோசகர் தொடர்பில் இருந்தார். அவ்வப்போது நிலைமையைப் பற்றி அறிவிக்கப்பட்டது. பள்ளிவாசல் தலைவர் அலியார் உதுமா லெப்பை, நம்பிக்கையாளர் சலீம்தீன் ஆகியோர் பள்ளிவாசல் தகர்க்கப்படாது, பாதுகாக்கப்படுவதில் அதிக அக்கறையுடன் செயல்பட்டனர். 
  
சலீம்தீன் தம்புள்ளை பொலீஸில் முறைப்பாடொன்றை பதிவு செய்திருந்தார். அந்த நீண்ட வாக்குமூலத்தில் இழப்புகள் பற்றியும் குறிப்பிடப்பட்டிருந்ததோடு, பள்ளிவாசலுக்கோ, அதனோடு தொடர்புடைய எவருடைய உயிர்களுக்கோ, உடைமைகளுக்கோ பாதிப்பு ஏற்பட்டால் அதற்கு விகாரதிபதி பொறுப்பேற்க வேண்டும் என்றும் கூறியிருந்தார். அமைச்சர் ஹக்கீமின் பணிப்புரைக்கமைவாக உடனடியாக அந்த முறைப்பாட்டின் அத்தாட்;சிப்படுத்தப்பட்ட பிரதியொன்றை பெற்றுக்கொள்ளுமாறு பாரூக் எம்.பி, சலீம்தீனுக்கு தொலைபேசியில் அறிவுறுத்தினார். 

நிலைமை ஒரளவு சீராகி, சுமூக நிலை தோன்றியதால் மறுநாள் இரவு முத்தலீப் பாவா பாரூக், எம்.பி தம்புள்ளை சென்றார். அவருடன் முஸ்லிம் காங்கிரஸூடன் முரண்பட்டுக்கொண்டு, அரசாங்கத்தோடு 'நேரடித் தொடர்பு' ஏற்படுத்தி வட மாகாண சபைத் தேர்தலில் வவுனியா மாவட்டத்தில் போட்டியிட்ட மௌலவி ஒருவர் அங்கு சென்றிருந்தார். கிழக்கு மாகாண சபை மு.கா உறுப்பினர் ஆர்.எம். அன்வர் அங்கு அப்பொழுது வந்திருந்தார். பள்ளிவாசல் நிருவாகிகளோடு உரையாடி அவர்கள் பல விடயங்களைத் தெரிந்து கொண்டனர். 

வியாழக்கிழமை அதிகாலையில் மு.கா எம்.பி எச்.எம்.எம். ஹரீஸ் தம்புள்ளை பள்ளிவாயலுக்கு சென்றிருந்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :