அரசாங்கத்தை உருவாக்கவும், கவிழ்க்கவும் எமக்கு சக்தியுள்ளது - ஞானசார தேரர்



ரசாங்கத்தை உருவாக்கவும், கவிழ்க்கவும் முடியும் என பொதுபல சேனா இயக்கம் தெரிவித்துள்ளது. அரசாங்கத்தை உருவாக்குவதற்கும் கவிழ்ப்பதற்கும் தமது இயக்கத்திற்கு சக்தியிருப்பதாக பொதுபலசேனாவின் பொதுச் செயலாளர் கலபொடத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். எவ்வாறெனினும், மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தை கவிழ்க்கும் உத்தேசம் கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கத்திற்கு எதிராக தமது இயக்கம் சூழ்ச்சி செய்வதாக சில அமைச்சர்கள் சுமத்தி வரும் குற்றச்சாட்டுக்கள் ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என அவர் தெரிவித்துள்ளார். தேசிய நல்லிணக்கம் பற்றி அமைச்சர் வாசுதேவ நாணயக்கார கருத்து வெளியிடும் போதிலும், அவரது மனைவி ஜெனீவா சென்று நாட்டில் ஐக்கியமில்லை என தெரிவிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :