ஜாதிக பல சேனாவின் பொதுச் செயலாளர் விஜித தேரர் மீது மீண்டும் அராஜகம்

ஜா
திக பல சேனாவின் பொதுச் செயலாளர் வட்டரக விஜித தேரர் ஒரு சில அடிப்படை வாத பௌத்தர்களினதும், பொது பல சேனா உறுப்பினர்களினதும் பலத்த எதிர்ப்பை மீறி மஹியங்கனை பிரதேச சபை கூட்டத்தில் இன்று (22.04.2014) கலந்து கொண்டுள்ளார்.

மஹியங்கனை பிரதேச சபையில் நடைப்பெற்ற கடைசி இரு அமர்விலும் அச்சுறுத்தல் காரணமாக கலந்து கொள்ளாத அவர் மூன்றாவது அமர்வில் மஹியங்கனை பொலிஸாரின் பலத்த பாதுகாப்புக்கு மத்தியிலேயே அவர் இன்று கலந்து கொண்டுள்ளார்.

தற்போது வட்டரக விஜித தேரர் மஹியங்கனை பொலிஸாரின் பாதுகாப்பில் உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் சிறுபான்மையான முஸ்லிம் மக்களுக்கு எதிராக பௌத்தர்களை தூண்டிவிடும் அமைப்பான பொது பலசேனா அமைப்பை எதிர்த்து இலங்கை மக்களை ஒன்று படுத்தும் விதமாக செயற்பட்டு வந்த இவர்; இம்மாதம் கொழும்பு நிபுன் ஹோட்டலில் ஜாதிக பல சேனா அமைப்பின் ஊடகவிலாளர் மாநாட்டில் வைத்து ஜனநாயகத்துக்கு எதிராக பொது பலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கல பொட அத்தே ஞான சார தேரரினால் பகிரங்கமாக அச்சுறுத்தப் பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :