மலேசியா செல்கிறார் ஒபாமா - நூற்றுக்கும் அதிகமான முஸ்லிம் அமைப்புகள் எதிர்த்து ஆர்ப்பாட்டம்

லேஷியாவுக்கு அமெரிக்க ஜனாதிபதி வருகை தரவுள்ளதையிட்டு அங்கு பாரிய எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. 

ஜனாதிபதி பராக் ஒபாமாவை எதிர்த்து நூற்றுக்கும் அதிகமான முஸ்லிம் அமைப்புகள் கோலாலம்பூரில் பாரிய ஆர்ப்பாட்டங்களை ஏற்பாடு செய்தன.

ஆசிய நாடுகளுக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா இம்மாதம் 26, 27, 28 திகதிகளில் மலேஷியாவுக்கு வரவுள்ளார். 1966 ம் ஆண்டுக்குப்பின்னர் அமெரிக்க தலைவர் ஒருவர் மலேஷியாவுக்கு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

உலகிலேயே முஸ்லிம்களை அதிகமாகக் கொண்ட மலேஷியாவில் ஒபாமாவின் வருகை பாரிய சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. அரபுலகில் அமெரிக்கா நடந்து கொள்ளும் விதம் பலஸ்தீனர்களுக்கு எதிரான இஸ்ரேலின் வன்முறைகளை அமெரிக்கா கட்டுப்படுத்தாமை போன்ற செயற்பாடுகளால் பொதுவாக முஸ்லிம்கள் அமெரிக்காமீது அதிருப்தியில் உள்ளனர்.

இந்நிலையில் இஸ்லாத்தின் எதிரியென அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவை வர்ணித்துள்ள மலேஷிய முஸ்லிம் செயற்பாட்டாளர்கள் அமெரிக்க தூதராலயத்தின் வெளியில் கூடி எதிர்ப்பு தெரிவித்தனர். கோலாலம்பூரில் ஜும்ஆத் தொழுகைக்குப்பின் அமெரிக்க தூதராலயத்தை நோக்கி அணிவகுப்பாகச் சென்ற ஆர்ப்பாட்டக்காரர்கள் "அல்லாஹ் பெரியவன்" "பராக் ஒபாமா இறைதூதர் முஹம்மது நபியின் எதிரி" எனக் கூக்குரல் இட்டனர். அமெரிக்காவுக்கு எதிரான கடுமையான நிலைபாட்டை மலேஷியாவின் முன்னாள் பிரதமர் (1981-2003) மஹாதிர் மொஹம்மட் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :