நிஸாம் முகம்மது சவுஜீன் மட்டக்களப்பிற்கு நீதி நிருவாக சமாதான நீதவானாக சத்தியப்பிரமானம்

ட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடி பிரதேசத்தில் 5குறிச்சி முஸ்தபா ஹாஜியார் வீதியில் வசிக்கும் நிஸாம் முகம்மது சவுஜீன் அண்மையில் மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்ற நீதிபதி ரீ.எல்.மனாப் முன்னிலையில் மட்டக்களப்பு மாவட்ட நீதி நிருவாக வலயத்துக்கான சமாதான நீதவானாக சத்தியப்பிரமானம் செய்து கொண்டார்.

இலங்கை போக்குவரத்து சபை காத்தான்குடி சாலையின் உத்தியோகத்தராக கடமையாற்றிவரும் இவர் சமாதான நீதவான்களின் மனித உரிமைகள் அமைப்பின் சிவில் இணைப்பாளரும்,சிவில் பாதுகாப்பு பிரிவின் உறுப்பினரும்,காத்தான்குடி அல் ஹிறா மஹா வித்தியாலயத்தின் பழைய மாணவருமாவார்.

பல்வேறு சமூக சேவை அமைப்புக்களில் இணைந்து செயற்படும் ஒரு சமூக சேவையாளரான இவர் என்.எம்.எம்.நிஸாம்,ஏ.பி.சரீனா ஆகியோரின் புதல்வருமாவார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :