வாகனங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ரீதியாக திறந்து வைப்பு - படங்கள்

 உதிரிப் பாகங்களை ஒன்றிணைத்து வாகனங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வைபவ ரீதியாக திறந்து வைத்துள்ளார்.

பொல்கஹவெலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள மைக்ரோ கார் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் இந்தத் தொழிற்சாலையினை கடந்த 18 ஆம் திகதி ஜனாதிபதி உத்தியோகபூர்வமாக திறந்து வைத்தார்.

இந்த வைபவத்தில் சிரேஷ்ட அமைச்சரும் பிரதி நிதி அமைசச்ருமான கலாநதி சரத் அமுனுகம, கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் ரிஷாத் பதியுதீன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இலங்கையில் உதிரிப்பாகங்களை ஒன்றிணைத்து கார்கள் மற்றும் வாகனங்களை நிர்மாணிக்கும் ஒரேயொரு தொழிற்சாலை இதுவாகும்.

இத்தொழிற்சாலையில் மாதாந்தம் 2800 வாகனங்களை பொருத்தக்கூடியதாக இருக்கும் என மைக்ரோ கார் பிரைவேட் லிமிடெட் தலைவர் கலாநிதி லோரன்ஸ் பெரேரா தெரிவித்துள்ளார்.

இலங்கையில் தயாரிக்கப்படும் இந்த மைக்ரோ வாகனங்கள் முதற் கட்டமாக பங்காளதேஷுக்கு ஏற்றுமதி செய்யப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், நேபாளம், பாகிஸ்தான், மாலைதீவுகள் ஆகிய நாடுகளுக்கும் இவற்றை ஏற்றுமதி செய்யத் திட்டமிடப்பட்டுள்ளதாக லோரன்ஸ் பெரேரா தெரிவித்தார்.

இதேவேளை இத்தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட மைக்ரோ ரக கார் ஒன்றினையும் ஜனாதிபதி செலுத்தினார்.






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :