பழுலுல்லாஹ் பர்ஹான்-
காத்தான்குடி தாருல் அதர் அத்தஅவிய்யா அமைப்பினால் 25-04-2014 இன்று வெள்ளிக்கிழமை காத்தான்குடி பிரதேசத்திலிலுள்ள ஜூம்மா பள்ளிவாயல்களில் ஜூம்மா தொழுகையின் பின்னர் மௌலவி அப்துர் ரஊப் அவர்களின் ஆதரவாளர்களே!, உலமாஉகளே! எனும் தலைப்பில் துண்டுப்பிரசுரம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அத் துண்டுப்பிரசுரம் எமது வாசர்களுக்காக பதிவேற்றம் செய்யப்படுகின்றது.
இன்னும் அவர்கள், (றஹ்மானின் அடியார்கள் ) தங்கள் இறைவனுடைய வசனங்களைக் கொண்டு நினைவூட்டப்பட்டால், செவிடர்களையும், குருடர்களையும் போல் அவற்றின் மீது விழமாட்டார்கள். (சிந்தனையுடன் செவி சாய்ப்பார்கள்.)' (அல்குர்ஆன் 25:73)
மௌலவி அப்துர் ரஊப் அவர்களின் ஆதரவாளர்களே!, உலமாஉகளே!
அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மத்துழ்ழாஹி வபறகாத்துஹு,
உங்களுடன் சில நிமிடங்கள் மனம் திறந்து பேசுகின்றோம்.
எமதூரில் கடந்த முப்பது வருடங்களுக்கும் மேலாக மௌலவி அப்துர் ரஊப் அவர்கள், மார்க்க உரைகளிலும்;, எழுத்துக்களிலும் 'எல்லாம் அவனே' என்ற அத்வைத கோட்பாட்டை வளியுறுத்தி வந்தது நாம் எல்லோரும் அறிந்த விடயம். இவரது கருத்துக்கள், செயற்பாடுகள் சத்திய மார்க்கத்தின் கொள்கைக் கோட்பாடுகளுக்கும், பகுத்தறிவிற்கும் விரோதமானவை என்பது குறித்து பல வருடங்களாக தாருல் அதர் அமைப்பினராகிய நாம்; பல்வேறு சந்தர்ப்பங்களில் ஓடியோ, வீடியோ, பிரசுரம், மாநாடு மற்றும் இணையதளம் ஆகியவற்றின் ஊடாக தெளிவுபடுத்தி வருகின்றோம்.
மிக அண்மைக் காலமாக மௌலவி அப்துர் ரஊப் அவர்களின் உரைகள், இஸ்லாத்தை அடியோடு தகர்க்கக் கூடிய சூபித்துவ சிந்தனைகள் நிறைந்ததாகவும், எல்லாம் அவனே என்ற அத்வைத கோட்பாட்டை நியாயப்படுத்தக் கூடியதாகவும், பகுத்தறிவிற்கும், விஞ்ஞானத்திற்கும் சம்பந்தமில்லாத வகையிலும்; அமைந்துள்ளதுடன், அவரின் பேச்சை மார்க்கமென நம்பி பின்பற்றுகின்ற உங்களது ஈமானின் நிலையையும் கேள்விக்குல்லாக்கியுள்ளது.
தாருல் அதர் அமைப்பினராகிய நாம், நமது மார்க்கப் பிரச்சாரப் பயணத்தில் எந்தவொரு தனி நபர்கள், அமைப்புக்கள் மீது காழ்ப்புணர்வோ, தனிப்பட்ட குரோதமோ இன்றி, அழ்ழாஹ்வின் பரிபூரண திருப்தியை எதிர்பார்த்து, முழுக்க முழுக்க நேர்மையாகவும், ஜனநாயக அடிப்படையிலும் பிரச்சாரம் செய்து வருகிறோம். நாம் அரசியல் மற்றும் வேறு நலன்களுக்காக சமூகத்தைக் காட்டிக் கொடுக்கவுமில்லை, மௌலவி அப்துர் ரஊப் அவர்களின் மார்க்க ரீதியான முரண்பாடுகள் குறித்து இந்நாட்டின் உயர்பீடங்களுக்கு இன்றுவரை கொண்டு சென்றதுமில்லை.
சுத்திய மார்க்கத்தின் கருத்து முரண்பாடுகளை எமக்குள்ளேயே பேசித் தீர்க்கவே விரும்புகிறோம். இதனடிப்படையில் கடந்த 20.04.2014 அன்று ஞாயிற்றுக்கிழமை காத்தான்குடி மீராபாலிகா பாடசாலை முன்பாகவுள்ள பஸ்மலா சதுக்கத்தில் இஸ்லாமிய மார்க்கப் பிரச்சாரக் கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தோம். இருந்தபோதிலும் இப்பிரச்சாரக் கூட்டத்தை தடுத்து நிறுத்துவதற்காக மௌலவி அப்துர் ரஊப் அவர்களின்; ஆதரவாளர்கள், அதனை தடுப்பதற்குரிய பல்வேறு விரோத நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
இதற்கமைவாக பாதுகாப்புத் துறையினரிடம், நாங்கள் செய்யாத, அநாவசியமான, பொய்யான வன்முறை குற்றச்சாட்டுகளை எம்மீது சுமத்தி, எமது பிரச்சாரக் கூட்டத்தினை தடுத்து நிறுத்துவதற்காக பல்வேறு உபாயங்களைக் கையாண்டணர். பிரச்சாரக் கூட்டம் நடக்க இருந்த இடத்தை பொலீசாரிடம் சொல்லி மாற்றினர்.
பயான் சத்தம் கூட தமது காதுகளில் விழக்கூடாது என்பதற்காக அவர்களை நோக்கியிருந்த ஒலிபெருக்கிகளை பொலீஸாரைக் கொண்டு அகற்ற முயன்றனர். தமது கொள்கைவாதிகள் யாரும் இந்நிகழ்சியைப் பார்க்கக் கூடாது, கேட்கவும் கூடாது, மீறினால் அவர்கள் தமது கொள்கைவாதிகள் கிடையாது என்றும் சத்தியத்தை கேட்க விடாது தடுத்தனர். இவர்கள் குறித்து அழ்ழாஹ் அல்குர்ஆனில்,
மேலும் அவர்களிடம், அழ்ழாஹ் இறக்கிய (வேதத்)தின் பக்கமும், (அவனுடைய) தூதரின் பக்கமும் (தீர்ப்புப் பெற) வாருங்கள்' என்று கூறப்பட்டால், அந்த முனாஃபிக்குகள் (நயவஞ்சகர்கள்) உம்மிடமிருந்து முற்றிலும் நீங்கிக் கொள்வதையே நீர் பார்ப்பீர்' (அல்குர்ஆன் 4:61)
எனினும் அழ்ழாஹ்வின் உதவியாலும், எமது தூய்மையான எண்ணத்தினாலும் இடத்தை மாற்றி எமது பிரச்சாரக் கூட்டத்தினை சிறப்பாக நடத்தி முடித்தோம்.
எனினும் அழ்ழாஹ்வின் உதவியாலும், எமது தூய்மையான எண்ணத்தினாலும் இடத்தை மாற்றி எமது பிரச்சாரக் கூட்டத்தினை சிறப்பாக நடத்தி முடித்தோம்.
இக்கூட்டத்தை நடத்துவதால் எமக்கு எவ்வித உலகாயித நோக்கங்களோ, நன்மைகளோ கிடையாது. முழுக்க குழுக்க இறை திருப்தியை எதிர்பார்த்தும், இச்சமூகத்தின் மறுமை நலனை கவனத்திற் கொண்டும், நபிகளாரின் பின்வரும் செய்திகளை அடிப்படையாக வைத்தும், இன்னும் சொல்லப் போனால் பல்லாயிரக்கணக்கான ரூபாய்களை நமது சகோதரர்களிடத்தில் இருந்து அறவிட்டு செலவு செய்தும், உடலியல் ரீதியான பல தியாகங்களுக்கு மத்தியில் தான் இக்கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
அழ்ழாஹ்வின் தூதர் கூறினார்கள், 'அழ்ழாஹ்வின் மீதாணையாக! உங்கள் மூலம் ஒரேயொருவருக்கு அழ்ழாஹ் நேர்வழியளிப்பது (அரபுகளின் உயரிய செல்வமான) சிவப்பு ஒட்டகங்களை (சொந்தமாக்கிக் கொள்வதை விட, அல்லது அவற்றை தர்மம் செய்வதை) விட உங்களுக்குச் சிறந்ததாகும் என்று சொன்னார்கள்' (ஆதாரம்: புஹாரி-4210)
'யார் ஓர் நலவான செய்தியை மற்றொருவருக்கு அறிவித்துக் கொடுக்கின்றாரோ, அவர் அதை செய்தவர் போன்றாவார்.' (ஆதாரம்: முஸ்லிம்)
இக்கூட்டத்தில் மௌலவி அப்துர் ரஊப் அவர்களின், மார்க்கதிற்கும், பகுத்தறிவிற்கும், விஞ்ஞானத்திற்கும் சம்பந்தமில்லாத உரைகளை ஒளிபரப்பியும், தர்ஹா வழிபாடு என்ற பேரில் நடக்கும் மாற்று மத காலாசாரங்கள் குறித்தும், மூட நம்பிக்கைகள் குறித்தும், தவ்ஹீத் கலிமாவிற்குறிய சரியான அர்த்தம் குறித்தும் விளக்கமளித்தோம். அத்துடன், யார் மார்க்கத்தில் சத்தியத்தை பிரச்சாரம் செய்கின்றனர் என்பதை கலந்துரையாடலில் அல்லது விவாதத்தில் நிரூபிக்க வருமாறு ஒரு மதாகால அவகாசத்துடன் பகிரங்க அழைப்பையும் விடுத்திருந்தோம்.
மௌலவி அப்துர் ரஊப் அவர்களின் ஆதரவாளர்களே!, உலமாஉகளே!
உங்களுக்கு ஒரு தார்மீகக் கடமையும், பொறுப்பும் உள்ளது. மார்க்க ரீதியான முரண்பாடுகளை நீக்குவதற்கு ஒரு நல்ல சந்தர்ப்பமே விவாதமாகும். நீங்கள் தெளிவானவர்களாகவும், நேர்மையாளர்களாகவும், அழ்ழாஹ்வை அஞ்சியவர்களாகவும் இருந்தால் இவ்விவாத அழைப்பை ஏற்று பகிரங்க கருத்தாடலுக்கு மௌலவி அப்துர் ரஊப் அவர்களையும்; அவரின் கொள்கை சார்ந்த உலமாஉகளையும் அழைத்து வாருங்கள். சுமூகமானதும் நாகரீகமானதுமான அடிப்படையில் கருத்தாடல்களை மேற்கொள்வோம். நீதமாகவும் நேர்மையாகவும் சிந்திக்கும் அவதானிகளை உட்பொதிந்த எமதூரின் சமூக நிறுவனங்கள் இதில் பார்வையாளர்களாக இருக்கட்டும். ஓவ்வொருவரும் தத்தமது கொள்கைகளை நிரூபிப்பதற்கு இது ஒரு நல்ல சந்தர்ப்பமாக இருக்கும். நீங்களே நடுநிலையாக இருந்து சிந்தித்துப்பாருங்கள்.
சம்மந்தமில்லாத காரணங்களை காட்டி அவர்கள் பகிரங்க கருத்தாடலுக்கு அல்லது விவாதத்திற்கு வராவிட்டால், நீங்;களே அவர்களை அடையாளம் கண்டுகொள்ளுங்கள்! எல்லாவற்றுக்கும் அழ்ழாஹ் போதுமானவன்.
மௌலவி அப்துர் ரஊப் அவர்களின் ஆதரவாளர்களே!
நீங்கள் கடைப்பிடிக்கும் கொள்கை உண்மையானது என எண்ணி, உடலாலும், பொருளாலும் பல தியாகங்கள் செய்து வருகிறீர்கள். சற்று சிந்தித்துப் பாருங்கள். நமக்கு அழ்ழாஹ் அறிவைத் தந்துள்ளான். உங்களது தியாகங்கள் வீனாகக் கூடாது. நீங்கள் மறுமையில் நஸ்டமடையக் கூடாது என்பதே எமது எண்ணமும் கவலையும்.
எனவே, சத்தியத்தை சத்தியமாகவும், அசத்தியத்தை அசத்தியமாகவும் விளங்கி, அவனது தீனை முழுமையாகப் பின்பற்றிய நல்லடியார்களாக, எல்லாம் வல்ல அழ்ழாஹுத்தஆலா எம்மனைவர்களையும் ஆக்கியருள்வானாக!
இப்படிக்கு.
தாருல் அதர் அத்தஅவிய்யா
(மத்ஹபுகள் சாராத அல்குர்ஆன் அஸ்ஸுன்னா அடிப்படையிலான பிரச்சார அமைப்பு)
'எமது கடமை தெளிவாகச் சொல்வதேயன்றி வேறில்லை' (36:17)
த.பெ.இல-19, கப்பல் ஆலிம் வீதி, புதிய காத்தான்குடி-02. - 25.04.2014 என்று அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
.jpg)
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment