அரச அங்கீகாரம் பெற்ற தமிழ் சிங்கள மொழி பெயர்ப்பாளராக எம்.ஐ.எம்.முஸம்மில் நியமனம்.

பழுலுல்லாஹ் பர்ஹான்-

ட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடி முதலாம் குறிச்சியைச் சேர்ந்த ஒய்வு பெற்ற அதிபர் எஸ்.எச்.எம்.இஸ்மாயில் ,கலிமத்து சுகறா தம்பதியினரின் புதல்வரும்,காத்தான்குடி நகர சபையில் முகாமைத்துவ உதவியாளராக கடமையாற்றும் ஜனாப் எம்.ஐ.எம்.முஸ்ம்மில் அண்மையில் மட்டக்களப்பு மாவட்ட நீதவான் ஜனாப் ரி.எல்.ஏ.மனாப் முன்னிலையில் நீதியமைச்சின் அங்கீகாரம் பெற்ற தமிழ் சிங்கள மொழி பெயர்ப்பாளராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.

நீதியமைச்சினால் மேற்படி மொழி பெயர்ப்பாளர்களைத் தெரிவு செய்யும் போட்டிப் பரீட்சையில் அதி கூடிய புள்ளிகளைப் பெற்று இந்நியமனத்திற்கு தெரிவானதுடன், இவர் அரச கரும மொழிகள் திணைக்களத்தின் மொழி பெயர்ப்பாளர்கள் குழுவில் ஓர் அங்கத்கத்தவராகவும் பணிபுரிகின்றார்.

கலைத்துறையில் பெரும் ஈடுபாடுள்ள இவர் காத்தான்குடி அல் -மனார் பாடசாலை,சித்திக்கியா மகளிர் அரபுக் கல்லூரி ஆகியவற்றில் சிங்கள பாட போதனாசிரியராக கடமையாற்றியுள்ளதுடன்,காத்தான்குடி அந்-நாஸர் வித்தியாலயம் ,மட்டக்களப்பு சிவானந்தா வித்தியாலயத்தின் பழைய மாணவருமாவார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :