மக்களின் தேவைகளை அறிந்து அவற்றை எமது அரசு நிறைவேற்றி வருகின்றது - அமைச்சர் அதாஉல்லா

ஏ.ஜி.ஏ.கபூர், அக்கரைப்பற்று-

க்கள் ஆட்சியென்பது மக்களின் தேவைகளை அறிந்து அவைகளை நிறைவேற்றுவதோடு மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தி நாட்டை அபிவிருத்தி செய்வதாகும். அதனையே எமது அரசு செய்து வருகின்றது. ஒரு நாடு முன்னேற வேண்டுமென்றால் பிரதேசம் அபிவிருத்தி அடைய வேண்டும்,பிரதேசம் அபிவிருத்தி அடைய வேண்டும் என்றால் கிராமம் அபிவிருத்தி அடைய வேண்டும். கிராமம் அபிவிருத்தி அடைய வேண்டுமென்றால் அங்கு உட்கட்டமைப்பு மாத்திரமன்றி மக்களின் வாழ்க்கைத் தரமும் மேம்பட வேண்டும் அப்போதுதான் ஒரு நாடு அபிவிருத்தி அடையும் என்று உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாஉல்லா தெரிவித்தார்.

மஹிந்த சிந்தனை வேலைத் திட்டத்திற்கமைய பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் வழிகாட்டலின் கீழ் நிறைவான இல்லம் வளமான தாயகம் எனும் தொனிப் பொருளில் கிராம மட்டத்தில் மக்களின் தேவைகளை அடையாளம் கண்டு தீர்வு காண்பதற்காக நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் செயற்றிட்டத்தின் கீழ் அக்கரைப்பற்று பிரதேச செயலகப் பிரிவில் நடாத்தப்பட்ட கிராமிய மக்கள் ஒன்று கூடலும் மக்கள் நடமாடும் சேவையும் தேசிய அபிவிருத்தி ;வேலைத் திட்டம்-2014 நிகழ்வு கடந்த வியாழக்கிழமை (17.04.2014) அக்கரைப்பற்ற ஹிஜ்றா வித்தியாலயத்தில் உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சரும், அக்கரைப்பற்று அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான அமைச்சர் ஏ.எல்.எம்.அதாஉல்லா தலைமையில் நடைபெற்றபோது அதில் கலந்து கொண்டு அமைச்சர் அதாஉல்லா தேசியக் கொடியை ஏற்றி வைத்து நடமாடும் சேவையை ஆரம்பித்து வைத்த பின் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம், உதவிப் பிரதேச செயலாளர் அஷ்ஷேய்க் எம்.எஸ்.எம்.றஸ்ஸான், அமைச்சர் அதாஉல்லாவின் இணைப்புச் செயலாளர் சட்டத்தரணி எம்.எம்.பஹீஜ்.பொது சனத் தொடர்பு உத்தியோகத்தர் எஸ்.எம்.ஸபீஸ்,மாகாண அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெவ்வையின் இணைப்பாளர் யூ.எல்.எம்.உவைஸ், நீர் வழங்கள் வடிகாலமைப்பு சபை பிராந்திய முகாமையாளர் மற்றும் மாநகர ஆணையாளர் ஏ.எல்.அஷ்மி, திட்டமிடல் உதவிப் பணிப்பாளர் யூ.எல்.ஏ.ஹஸன், மாநகரசபை உறுப்பினர்களான ஏ.ஜி.அஸ்மி, என்.எம்.நஜுமுதீன், ஏ.எல்.ஜுனைதீன். சுகாதார வைத்திய அதிகாரி ஐ.எல்.சித்தீக்,சமுர்த்தி தலைமைப் பீட முகாமையாளர். மேலதிக மாவட்ட பதிவாளர். திணைக்களங்களின் தலைவர்கள், உத்தியோகத்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கிராம உத்தியோகத்தர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

அமைச்சர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்: மனைப் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்வதன் முலமே மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதோடு, ஆரோக்கியமான சமுதாயத்தையும் உருவாக்க முடியும். 

நம் முன்னோர்கள் வசதிகள் குறைந்த காலத்தில் உடல் ஆரோக்கியத்திற்கு அவசியமான உணவுப் பொருட்களை உற்பத்தி செய்து சாப்பிட்டதோடு தமது தேவைகளையும் பூர்த்தி செய்தனர்.இறைவன் மக்களுக்குத் தேவையான உணவுப் பொருட்களை நாம் வாழும் சூழலிலே எமக்குத் தந்துள்ளான் ஆனால் நாம் அதனை உதாசீனம் செய்து விரும்பியபடி வாழ்ந்து ஆரோக்கியமற்ற சமுதாயத்தை வளர்க்க முற்படுகின்றோம். மனைப் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்வதன் முலமே மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதோடு, ஆரோக்கியமான சமுதாயத்தையும் உருவாக்க முடியும். இதனால்தான் பொருளாதார அமைச்சின் முலம் அரசு பல்வேறு மக்கள் மேம்பாட்டுத் திட்டங்களைச் செயற்படுத்தி வருகின்றது.என்றார்.

நடமாடும் சேவையின்போது திரியபியஸ வீடமைப்புத் திட்டத்தின் கீழ் பயனாளி ஒருவருக்கு வீட்டுக்கான திறப்பு அமைச்சர் அவர்களினால் கையளிக்கப்பட்டதோடு, விஷேட தேவையுடையோருக்கு சக்கர நாற்காலிகள், பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள், சமுர்த்திப் பயனாளிகளுக்கான கொடுப்பனவுகள், வீடமைப்புக் கடன் பெறுபவர்களுக்கான முதலாம் கொடுப்பனவுக் காசோலைகள் என்பனவும் அமைச்சரால் வழங்கிவைக்கப்பட்டன..

அதுமாத்திரமன்றி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினால் வழங்கப்பட்ட கர்ப்பிணிகளுக்கான மருந்தூட்டப்பட்ட நுளம்பு வலைகளை பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் வழங்கி வைத்ததோடு, சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினால் சீனி மற்றும் கொலஸ்ட்ரோல் பரிசோதனைகளும் நடாத்தப்பட்டன.

தேசிய அடையாள அட்டை, பிறப்பு. இறப்பு பதிவுச் சான்றிதழ்கள், சமுர்த்தி பிரச்சினைகள் முதலிய பல்வேறு பிரச்சினைகள் தீர்த்து வைக்கப்பட்டன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :