றிசாத் பதியூதீனீன் நடவடிக்கையை பொதுபல சேனா எதிர்ப்பது நியாயமானது - பாலித ரங்கே பண்டார

மைச்சர் றிசாத் பதியூதீன் சம்பந்தப்பட்டுள்ள வில்பத்து விலங்குகள் சரணாலயத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் சட்டவிரோத குடியேற்றதை பொதுபல சேனா எதிர்ப்பது நியாயமானது என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டார தெரிவித்தார்.

பொதுபல சேனா, இந்த சட்டவிரோத குடியேற்றத்தை கடுமையாக எதிர்ப்பதை தான் ஏற்றுக்கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

உலகில் எந்த நாடும் விலங்குகளுக்கு ஒதுக்கப்படும் வலயங்களில் எவ்விதமான நடவடிக்கைகளையும் மேற்கொள்வதில்லை. அமைச்சர் றிசாத் பதியூதீன் வில்பத்து வனத்திற்கு சேதம் ஏற்படுத்தும் வகையில் முஸ்லிம் மக்களை அங்கு குடியேற்றியுள்ளார்.

இது பாரதூரமான சட்டவிரோத நடவடிக்கை. வில்பத்து ஊடாக மன்னார் வரை வீதியொன்றை நிர்மாணிக்க தற்போதைய அரசாங்கம் இதற்கு முன்னர் அனுமதி வழங்கியிருந்தது எனவும் பாலித ரங்கே பண்டார மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :