அர்த்தமற்ற வாதங்களும் ,முஸ்லிம் மக்களும்

 கே.சி.எம்.அஸ்ஹர்-

லசேன அமைப்பின் செயலாளர் ஞானதேரர் அவர்களின் சவாலை ஏற்று அவருடன் விவாதத்தில் ஈடுபடுவதற்காக முஸ்லிம் அமைப்புக்களோ, முஸ்லிம் அமைச்சர்களோ செல்வது இக்கால கட்டத்தில் ஆரோக்கியமானது 
அல்ல. இவ்விவாத நிகழ்வின் ஊடாக விரும்பத்தகாத நிகழ்வுகள் ஏதும் இடம்பெறலாம்.ஆகவே,இவ்விடயத்தில் மிகவும் விழிப்பாகவும் ,அவதானமாகவும் இருக்கவேண்டும்.ஹலால் பிரச்சினை ,பள்ளி வாயல் பிரச்சினை ,அபாயாப் பிரச்சினை ,சட்டக்கல்லூரிப் பிரச்சினை ,மறிச்சுக்கட்டி வில்பத்துகாணிப் பிரச்சினை என்று புதிது புதிதாக முஸ்லிம்களுக்கு எதிரான பிரச்சினைகள் வளர்ந்து கொண்டே செல்கிறன.

முஸ்லிம் கட்சிகள் அனைத்தும் மஹிந்த அரசில் உள்ளன.அமைச்சர்களாக உள்ளனர்.முஸ்லிம் மக்களும் அரசின் பக்கமே உள்ளனர்.நீதி அமைச்சராகவும் முஸ்லிம் ஒருவரே உள்ளார்.அவரையே தாக்குகின்றனர்.இங்கு என்ன 
நடை பெறுகிறது.சட்டத்துறை என்ன செய்கிறது.நீதி அமைச்சருக்கே இந்தக் கதி என்றால் சாதாரண குடிமகனின் நிலை என்ன? வஞ்சிக்கப்பட்ட வடபுல முஸ்லிம் மக்களின் பிரதி நிதி றிசாத் பதியுதீன் அவர்கள் இம்மக்களுக்கு 
தன்னால் இயன்ற உதவிகள் அனைத்தையும் செய்து வருகின்றார்.முஸ்லிம் நாடுகளின் உதவியுடன் வீடுகளை கட்டிக்கொடுக்கிறார்.காணிகள் அற்ற இலங்கையின் பூர்வீக குடிகளான இவர்கட்கு சட்டரீதியாக காணிகளையும் 
பெற்றுக் கொடுக்கின்றார்.வெளிநாடுகள் வீடுகளை இங்கு கட்டிக் கொடுக்கும் போது அரசின் சுமையே குறைகின்றது. 

2004 சுனாமி ஏற்பட்ட பிறகு உலகின் பல நாடுகள் முன்வந்து பல கிராமங்களையே உருவாக்கிக் கொடுத்துள்ளன. ஆங்கிலத்தில் போட்கள் போடப்பட்டன.இந்திய அரசும் 50,000 வீட்டுத்திட்டத்தை அமுல்ப்படுத்தி வருகின்றது.இவற்றையெல்லாம் கறுப்புக் கண்ணாடி போட்டு ,வெள்ளைக்கர இராச்சியம் உருவாக்கப்படுகின்றன.எனக்கோஷம் இடாமல் இருந்து விட்டு ,முஸ்லிம் நாடுகளால் கட்டிக்கொடுக்கப்பட்ட வீடுகளுக்கும் அன்று எவ்வித இனவியாக்கியானமும் செய்யாமல் தற்போது கட்டார் நாட்டு தனவந்தர்களால் கட்டிக்கொடுக்கப்படும் வீட்டுத்தி;ட்டத்திற்கு எதிராக முஸ்லிம் இராச்சியம் உருவாக்கப்படுகிறது.என்ற கோஷமும், ஏன் வெளிவந்து உள்ளது.

பொதுகன முன்னனி அரசில் இருக்கின்ற ஆளும் கட்சிகளிடையே விரிசல்கள் பெருகி வருவதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது.அமைச்சர் விமல் வீரவன்சவின் அணியினர் அமைச்சர் றஊப் ஹக்கீம் அவர்களோடு அடிக்கடி மோதுகின்றனர். ஜாதிக ஹெலஉருமய கட்சியினர் அமைச்சர் றிசாத் பதியுதீனுடன் மோதுகின்றனர்.இப்பிரச்சினைகளை தீரக்கவேண்டிய பொறுப்பு பொதுஜன முன்னனி செயலாளர் சுசில் பிரேம ஜயந்த அவர்களுக்கும் ,நாட்டின் ஜனாதிபதிக்கும் உண்டு.

அரசியல் இருக்கின்ற முஸ்லிம் அமைச்சர்களையும் ,பாராளுமன்ற உறுப்பினர்களையும் அரசையிட்டு வெளியேறிச்செல்ல தூண்டுவது.ஆரேக்கியமானதல்ல இது அரசுக்கு பெரும் பாதிப்பாகவே அமையும். முஸ்லிம் மக்களுக்கு ஏற்பட்டுள்ள மனக்காயங்களுக்கு ஒத்தடம் போடவேண்டிய பொறுப்பு அரசுக்கு உண்டு.பிரதமர் தி.மு.ஜயரத்ன ,அமைச்சர் பசீல் ராஜபக்ஷ, அமைச்சர் ராஜித சேன ரத்ன ,வாசுதேவ நாணயக்கர ,டீ.யு.குணசேகர ,மேல் மாகாண சபை உறுப்பினர் லால்காந்த போன்றோர் நல்ல தர்ம சிந்தனையுடன் முஸ்லிம் மக்களுக்காக குரல் கொடுக்கின்றனர்.இவர்கள் பாராட்டப்பட வேண்டியவர்கள்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :