ஐரோப்பிய ஒன்றியத்தால் அபிவிருத்தி செயற்பாட்டுக்கு ஒதுக்கிய நிதியை சரியாக கையாள நடவடிக்கை எடுக்கக் கோரி மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபருக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் மடல் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.
அவ் மடலில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது!
ஐரோப்பிய ஒன்றியம் பல கோடிக்கான நிதியை மட்டக்களப்பு மாவட்டத்தில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் அபிவிருத்தி வேலைக்கு ஒதுக்க ஏற்பாடு செய்துள்ள நிலையில் ஒரு சில அரசாங்க அரசியல் வாதிகள் எந்தவித பாதிப்புமில்லாத தங்களது பகுதிக்கும் இந்நிதியின் வேலைத் திட்டத்தை மேற்கொள்ள நடவடிக்கை எடுப்பதை இட்டு மிக வேதனை அடைகின்றோம்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரை பகுதியே யுத்தத்தால் மிகவும் பாதிக்கப்பட்டதாகும். இதுவே முக்கியமாக தெரிவு செய்யப்பட வேண்டும். இவ்வேளை சனத்தொகை அடிப்படையில் நிதியை பங்கீடு செய்து எதுவித பாதிப்புமற்ற தமது பிரதேங்களை அபிவிருத்தி செய்யும் நோக்குடன் மேற்கொள்ளப்படும் நடவடிக்கையை ஏற்க முடியாது.
இவ்விடயமாக ஐரோப்பிய ஒன்றியத்தின் கவனத்துக்கு கொண்டு வந்து எதுவித அரசியல் தடையுமின்றி பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவர்களின் உதவி சென்றடைய வழி செய்யவுள்ளோம்.
ஆனால் இவ்வகையில எமது மாவட்டத்தின் பொறுப்பு வாய்ந்த ஒரு அரச உயர் அதிகாரி என்ற வகையில் இவ்விடயத்தில் தலையிட்டு மிகவும் பாதிக்கப்பட்ட பிரதேசங்களின் அபிவிருத்திக்கு இவ் உதவிகள் சென்றடைய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றேன். பதிலை எதிர்பார்க்கின்றேன் என மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் பிரதிகள் பொது நிர்வாக அமைச்சர் று.னு.து.செனவிரத்ன, பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர், மாவட்ட செயலக திட்டப் பணிப்பாளர், மட்டக்களப்பு மாவட்டத்தின் அனைத்து பிரதேச செயலாளர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

_resize.jpg)
0 comments :
Post a Comment