இந்நாட்டில் முஸ்லீம் சமூகத்தின் உரிமைகளை வென்றெடுக்க SLMC க்கு ஆதரவளியுங்கள் -அமைச்சர் ஹக்கீம்


மேல் மாகாண சபையில் கொழும்பு மாவட்டத்தில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் மரச் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து புதுக்கடை, மீராணியா வீதியில் ஞாயிற்றுக்கிழமை (16) நள்ளிரவு 12 மணிவரை நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் கட்சியின் தலைவர், அமைச்சர் ரவூப் ஹக்கீம், தவிசாளர் அமைச்சர் பஷீர் சேகுதாவூத், மாகாண சபை உறுப்பினர்கள், கட்சி முக்கியஸ்தர்கள் ஆகியோர் உரையாற்றினர்.

இந் நாட்டில் குறிப்பாக முஸ்லிம் சமூகத்தின் மீதும், பொதுவாக சிறுபான்மை சமூகங்கள் மீதும் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள இனவாத நடவடிக்கைகளை முடிவுக்கு கொண்டு வருவதன் அவசியம் பற்றியும், அதற்கான முயற்சிகளை முன்னெடுப்பதற்காகவும், உரிமைகளை வென்றெடுப்பதற்காகவும் முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து வெற்றிபெறச் செய்யுமாறும் பெருந்திரளானோர் கலந்து கொண்ட இக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :