டாகடர் ஹபீஸ்,அஷரப் ஏ சமத்-
ஸ்ரீ. ல. மு. கா. தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் இன்று புதன் கிழமை களுத்துறை மாவட்டத்தில் தர்காடவுன், கொழும்பு 2 ஸ்ருவர்ட் வீதி மற்றும் இறுதியாக கொழும்பு 12 மத்திய வீதி ஆகிய இடங்களில் இடம்பெற்ற கடைசிநாள் தேர்தல் பிரச்சார கூட்டங்களில் கலந்துகொண்டு உரையாற்றினார்.
இறுதியாக இடம்பெற்ற கூட்டத்தில் உரையாற்றும் போது பிந்திக்கிடைத்த தகவலொன்றின் படி இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள ஜெனீவா பிரேரணையில் இலங்கைக்கு ஆதரவாக வாக்களிக்க பதின்நான்கு நாடுகள் மட்டுமே முன்வந்துள்ள்தாகவும் அவற்றில் அரைவாசிக்கதிகமானவை முஸ்லீம் நாடுகள் என்றும் குறிப்பிட்டார்.
அமைச்சர் ஹக்கீம் இறுதிக்கூட்டத்திற்கு வந்து சேர்வதற்கிடையில் இரவு பத்து மணியளவிலிருந்து பொலீசாரினால் இடையூறு ஏற்படுத்தப்பட்டது.



0 comments :
Post a Comment