இக்பால் அலி-
2013 ஆம் ஆண்டு தரம் 111 கல்விச் சேவைக்க நடைபெற்ற போட்டிப் பரீட்சையில் கலகெதர மடிகேயைச் சேர்ந்த எம். எம். எம். இம்ரான் சித்தியடைந்து நேர்முகப் பரீட்சைக்குத் தோற்றி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இவர் ஆரம்ப முதல் உயர் தரம் வரை கலகெதர ஜப்பார் கல்லூரியில் கல்லூரியில் கல்வி கற்றவர் இவரது முதல் ஆசிரியர் நியமனமும் அவர் கற்ற அதே பாடசாலையிலாகும்.
2002 முதல் 2007 ஆம் ஆண்டு வரை நுகவெல கனணி வலய நிலையத்தில் விரிவுரையாளராகவும் பறஹகதெனிய தாரூத் தவ்ஹீத் அரபுக் கல்லூரின் பகுதி நேரம் தகவல் தொழில் நுட்பப் பாடம் கற்பிக்கும் ஆசிரியராகவும் தற்போது கட்டுகஸ்தோட்டை கல்வி வலயத்தில் தகவல் தொழில் நுட்ப ஆசிரியர் ஆலோசகராகவும் கடமையாற்றி வருகின்றார்.
பறகஹதெனிய தேசிய பாடசாலையில் உயர் தரம் கல்வி கற்பிக்கும் ஆசிரியை ஏ. எப். றிம்ஸியாவின் கணவரும் எம், ஐ. எம், முக்தார், எஸ். எம். சுலைஹா பீபி ஆகிய தம்பதியினரின் புதல்வனும் ஆவர்
இவர் தம்முடைய கல்வி முயற்சிகளுக்கு பங்களிப்பு நல்கி அனைவருக்கும் இந்தச் சந்தர்ப்பத்தில் நன்றியைத் தெரிவித்து; கொள்கின்றனர்.
இம்முறை இவருடன் ஆறு முஸ்லிம் நபர்கள் இதில் தெரிவு செய்யப்பட்டுள்ளனர் அதுவும் மத்திய மாகாணத்திலேயே அனைவரும் தெரிவு செய்யப்பட்டுள்ளது என்பது முக்கிய அம்சம்.
.jpg)
0 comments :
Post a Comment