சரிபுத்தீனின் எல்லாளன் காவியம் எனும் நூல் வெளியீடு விழா

பா.சிகான்-

புலவர்மணி காப்பியக்கோ ஜின்னாஹ் சரிபுத்தீனின் எல்லாளன் காவியம் எனும் நூல் வெளியீடு  (23) ஞாயிற்றுக்கிழமையன்று யாழ்ப்பாணம் றக்கா வீதியில் அமைந்துள்ள கலாமுற்றம் ஓவியக்கூடத்தில் கவிஞர் சோ.பத்மநாதன் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்வின் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து இடம்பெற்றதுடன் தொடர்ந்து கவிஞர்.கு.றஜிபன் வரவேற்புரை நிகழ்த்தினார்.
அடுத்து ஆசியுரையினை கலாநிதி நீ.மரியசேவியர் அடிகளும்இவெளியீட்டுரையை பேராசிரியர் எஸ்.சிவலிங்கராஜாவும் மேற்கொண்டனர்.

நூலின் முதற்பிரதியை புரவலர்.எஸ்பி சாமி நூலாசிரியரிடம் இருந்து பெற்றுக்கொண்டார்.அதனை தொடர்ந்து ஏனையவர்களான யாழ் பல்கலைக்கழக கலைப்பீடாதிபதி வி.பி சிவநாதன்இசட்டபீடத் தலைவர் கலாநிதி த.கலாமணிஇஅருட்திரு செ.அன்புராசாஇசட்டத்தரணி சோ.தேவராசாஇவிரிவுரையாளர் இ.ராஜேஸ்கண்ணன்,ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

தொடர்ந்து நூலின் ஆய்வுரையை கலாநிதி நா.அகளங்கன்இநயப்புரை கலாநிதி செ.திருநாவுக்கரசு மற்றும் ஏற்புரையினை நூலாசிரியர் ஜின்னாஹ் சரிபுத்தீனும் மேற்கொண்டனர்.

இதன் போது இலக்கிய ஆர்வலர்கள் பலர் கலந்த கொண்டமை குறிப்பிடத்தக்கது.






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :