த.நவோஜ்-
ஓட்டமாவடி பிரதேச சபையினால் அமீர் அலி விளையாட்டு மைதானத்திற்கு அருகாமையில் நவீன முறையில் நிர்மானிக்கப்பட்ட சிறுவர் பூங்கா வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.
ஓட்டமாவடி பிரதேச சபையின் செயலாளர் ஆர்.தர்மலிங்கம் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதேச சபையின் தவிசாளர் கே.பி.எஸ்.ஹமீட், பிரதி தவிசாளர் ஏ.எம்.நௌபர் மற்றும் பிரதேச சபையின் ஆளும் தரப்பு, எதிர்தரப்பு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
புறநெகும திட்டத்தில் பதினெட்டு லட்சம் ரூபா நிதி அளிப்பில் அமைக்கப்பட்டுள்ள இச்சிறுவர் பூங்கா வாரத்தின் வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை, ஞாயிறுக்கிழமை, மற்றும் விடுமுறை தினங்களில் மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும் என பிரதேச சபையின் தவிசாளர் கே.பி.எஸ்.ஹமீட் தெரிவித்தார்.
.jpg)



0 comments :
Post a Comment