த.நவோஜ்-
மட்டக்களப்பு பாலமீன்மடு, திராய்மடு இந்து சமய அபிவிருத்தி மன்றத்தின் 18வது ஆண்டு நிறைவு விழாவும், பரிசளிப்பு விழாவும் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் பாலமீன்மடு விக்னேஸ்வரா வித்தியாலய மண்டபத்தில் நடைபெற்றது.
மன்றத் தலைவர் ந.ஜெகதீசன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சீ.யோகேஸ்வரன் கலந்து கொண்டதுடன், அதிதிகளாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான பிரசன்னா இந்திரகுமார், இரா.துரைரெட்ணம், மட்டக்களப்பு மாநரசபை ஆணையாளர் மா.உதயகுமார், மாவட்ட இந்து கலாசார அபிவிருத்தி உதவியாளர் திருமதி.எழில்வாணி பத்மகுமார், இந்து கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி.சறோஜினி வாலசுந்தரம், பாலமீன்மடு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.சி.என்.தர்மசேன, மட்டக்களப்பு இந்து வர்த்தக சங்க உறுப்பினர்களான ச.சிவபாதசுந்தரம், த.கிரிதராஜா, பாலமீன்மடு, திராய்மடு கிராம அதிகாரிகள், ஆலய தலைவர்கள், பாடசாலை அதிபர்;கள், விளையாட்டு கழக தலைவர்கள், கிராம பொதுமக்கள், அறநெறிப் பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
இங்கு நந்திக் கொடி ஏற்றப்பட்டு நிகழ்வு ஆரம்பமானது. பாலமீன்மடு, திராய்மடு அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களினால் இந்து சமய புரட்சிக் கீதம் இடம்பெற்றது. அத்தோடு பாலமீன்மடு, திராய்மடு நர்த்தன பவனம் மாணவர்களின் வரவேற்பு நடனம், குழுநடனம் மற்றும் அறநெறிப் பாடசாலை மாணவர்களின் குழு நடனம் என்பன இடம்பெற்றது.
இதன்போது பாலமீன்மடு, திராய்மடு கிராமத்தில் உயர்தரம், சாதாரண தரம், புலமைப் பரிசில் போன்றவற்றில் சித்தி பெற்ற மாணவர்களுக்கும், அவர்களின் பெற்றோருக்கும் மாலை அணிவித்து சித்தி பெற்றவர்களுக்கு அதிதிகளால் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
அத்தோடு பாலமீன்மடு, திராய்மடுவில் உள்ள ஆலயங்களின் தொண்டர் படை உறுப்பினர்கள், அறநெறிப் பாடசாலை ஆசிரியர்கள் போன்றோருக்கு அவர்களது சேவையைப் பாராட்டி மன்றத்தினால் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
.jpg)





.jpg)

0 comments :
Post a Comment