முதன் முதலாக பொத்துவிலில் நடமாடும் சேவையை ஆரம்பித்து வைத்த அமைச்சர் அதாஉல்லாஹ்





சலீம் றமீஸ்-

ஹிந்த சிந்தனை திட்டத்திற்கமைவாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் தனிநபர், குடும்பம்,பிரதேசம்,மாவட்டம்,மாகாணம் மற்றும் நாட்டின் முன்னேற்றம் என்ற தொனியில் கிராம மட்டத்தில் மக்களின் தேவைகளை கண்டறிந்து, தீர்வு காணும் வகையில் ஏற்படுத்தப்பட்டுள்ள நடமாடும் சேவை நடாத்தப்பட்டு வருகிறது.

இதற்கமைவாக பொத்துவில் பிரதேசத்தில் முதல்முதலாவதாக பொத்துவில் முதலாம் பிரிவில் நடமாடும் சேவை ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. பொத்துவில் பிரதேச செயலாளர் எம்.எம்.முஸர்ரத் தலைமையில் பொத்துவில் மினறுல் உலும் வித்தியாலயத்தில் இடம் பெற்றது.

இந்த நிகழ்வில் உள்ளுராட்சி, மாகாணசபைகள் அமைச்சரும், மாவட்ட பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுத் தலைவருமான ஏ.எல்.எம்.அதாஉல்லா பிரதம அதிதியாக கலந்து கொண்டு நடமாடும் சேவையை ஆரம்பித்து வைத்தார்.

அமைச்சருடன் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசன அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை, பொத்துவில் பிரதேச சபை தவிசாளர் எம்.எஸ்.வாஸீத், அமைச்சர் ஏ.எல்.எம்.அதாஉல்லாவின் பொத்துவில் பிரதேச இணைப்பாளர் ஏ.பதுர்கான, சிறிலங்கா சுதந்திர கட்சியின் பொத்துவில் பிரதேச அமைப்பாளர் ஏ.எம்.அப்துல் மஜீட், கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி,நீர்ப்பாசன அமைச்சின் செயலாளர் ஏ.எச்.எம்.அன்ஸார், உதவிச் செயலாளர் எம்.ஐ.சலாஹூதீன் உட்பட முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :