தலைமைப் பதவியை தக்கவைத்துக் கொள்ள தான் விரும்பவில்லை – சட்டத்தரணி கபூர்



எஸ்.எம்.ஏ. கபூர்-
ட்டாளைச்சேனையில் மிகபிரபல்யமானதேசியபாடசாலையின் பழையமாணவர் சங்கத் தலைவராகநான் தெரிவுசெய்யப்பட்டுபலமாதங்களுக்குபின்புதான் கல்விஅமைச்சினால் வெளியிடப்பட்டிருந்தஒருசுற்றரிக்கையின் பிரகாரம் அக் கல்லூரியின் அதிபர்தான் பழையமாணவசங்கத்தின் தலைவராக இருக்கவேண்டும் என்றஒருநியதிஎனக்குதெரியவந்தது.அதனால் அப் பதவியிலிருந்துநான் உடனடியாகவிலகுவதாகவும் அதற்கு இக் கல்லூரிஅதிபரேஅச் சங்கத்தின் தலைவராகநியமிக்கப்படவேண்டும் என்றகோரிக்கையைமுதல் முதலாகசுயமாகமுன் வந்துவழிமொழிந்தேன் எனஅட்டாளைச்சேனைதேசியபாடசாலையின் பழையமாணவசங்கத்தின் வருடாந்தபொது கூட்டத்தில் கலந்துகொண்டுபேசுகையில் சிரேஷ்ட சட்டத்தரணி எஸ்.எம்.ஏ. கபூர் தெரிவித்தார்.

அண்மையில் அட்டாளைச்சேனைதேசியபாடசாலைஅதிபர் வி.ரி.எம். ஹனிபாஅவர்கள் தலைமையில் கல்லூரிமண்டபத்தில் நடைபெற்றமேற்படி கூட்டத்தில் கபூர் அவர்கள் மேலும் பேசுகையில் தெரிவித்ததாவதுபட்டங்களும்,பதவிகளும் எங்களைத்தேடிவரவேண்டுமேயன்றிநாங்கள் அவைகளுக்குபின்னால் அப் பதவிகளைதேடிசெல்லக்கூடாதுஎனவும் குறிப்பிட்டார்.

குறிப்பிட்டபாடசாலையின் பழையமாணவசங்கத்தின் பதவிகளுக்குபோட்டிபோட்டுக் கொண்டுஎங்களுக்குள் சண்டையிட்டுக்கொண்டும் அப்பதவிகளைஅடைவதற்குமும்மூலமாகபாடுபட்டு இயங்கும் பலர் இன்றும் எங்கள் மத்தியில் இருக்கும் நிலையில் தான் ஏகமானதாகதெரிவுசெய்யப்பட்டஎனதுபதவியைதுறந்துஉரியவரைநியமிக்கும்படிபரிந்துரைசெய்தேன் எனமேற்படி கூட்டத்தில் சட்டத்தரணிகபூர் அவர்கள் தனதுமுகவுரையில் மேலும் தெரிவித்தார்.

எனவேநாம் அரசியல் சாயங்கள் பூசப்பட்டவர்களாக இருந்தாலும் எந்தகட்சியில் அங்கத்துவம் வகித்தாலும் நாம் படித்தகல்லூரியின் எதிர்காலநலனுக்கும் அதன் அபிவிருத்திக்கும் பாடசாலையின் முன்னேற்றத்திர்கும் ஒற்றுமையுடன் கட்சிவேறுபாடுகளுக்குஅப்பால் சென்றுநாம் எல்லோரும் ஒன்றுபட்டு இனிமேலாவதுசெயல்படவேண்டும் எனவும்கேட்டுக்கொள்வதாகவும் வேண்டிக்கொண்டார்.

மேற்படி கூட்டத்தில் கல்லூரியின் அதிபர் உட்படபழையமாணவசங்கசெயாலாளர் எம்.ஏ.சி. நஜீப் முன்னாள் கல்விஉதவிப் பணிப்பாளர் யூ.எம். வாஹிட்,பொருளாலர் சட்டத்தரணிஏ.சி. கசுறுடீன் முன்னால் பாடசாலைஅதிபர் ஏ.சி. சைபுதீன் உட்பட ஏனைய ஊர் முக்கியபிரமுகர்கள் பலர் கலந்துகொண்டுதங்களதுகருத்துக்களையும் அவிப்பிராயங்களையும் தெரிவித்;தார்கள்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :