அட்டாளைச்சேனை மத்திய மகா வித்தியாலயத்தின் (தேசிய பாடசாலை) தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களையும், வழிப்படுத்திய ஆசிரியர்களையும் பாராட்டிக் கௌரவிக்கும் நிகழ்வு நேற்று (22) லொயிட்ஸ் வரவேற்பு மண்டபத்தில் நடைபெற்றது.
பாடசாலை அதிபர் மௌலவி வீ.ரி.எம்.ஹனீபா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதிகளாக நீதிபதி அல்ஹாபிழ் என்.எம்.எம்.அப்துல்லா மற்றும் அக்கரைப்பற்று வலயக் கல்விப்பணிப்பாளர் ஏ.எல்.எம்.காசிம், கௌரவ அதிதிகளாக உதவி கல்விப் பணிப்பாளர் எம்.ஏ.எம்.அஸ்ஹர், உதவி அதிபர் ஏ.எல்.எம்.பத்தாஹ், பாடசாலை பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் சங்க நிருவாகத்தினர் உள்ளிட்ட பல கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இந்நிகழ்வில் சித்தியடைந்த மாணவர்களையும், கற்பித்துக் கொடுத்த ஆசிரியர்களையும் பாராட்டி பதக்கம், கிண்ணம், சான்றிதழ் மற்றும் பணப்பரிசில் பரிசுப் பொதிகளை போன்றன வழங்கி வைக்கப்பட்டன.
இதன்போது பாடசாலையின் அதிபருக்கு பெற்றோர் ஒன்றியத்தினால் பரிசில் வழங்கி வைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
.jpg)





0 comments :
Post a Comment