நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீமிற்கு எதிராக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஜாதிக ஹெல உறுமய கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. அமைச்சர் ஹக்கீம் நாட்டுக்கு எதிராக செயற்பட்டுள்ளார் என கட்சியின் ஊடகப் பேச்சாளர் நிசாந்த ஸ்ரீ ரீ வர்ணசிங்க தெரிவித்துள்ளார்.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஜெனீவா மனித உரிமைப் பேரவை மாநாட்டிற்கு இலங்கைக்கு எதிரான அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளது. முஸ்லிம்களின் மதச் சுதந்திரம் முடக்கப்பட்டுள்ளதாகவும், இதற்கு ஜாதிக ஹெல உறுமய, பொதுபல சேனா, ராவணா பலய போன்ற அமைப்புக்கள் பொறுப்பு சொல்ல வேண்டுமெனவும் முஸ்லிம் காங்கிரஸின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் நீதி அமைச்சர் பதவியை வகித்துக்கொண்டே அரசாங்கத்திற்கு எதிராக குற்றம் சுமத்துவது வெட்கம் கெட்ட செயலாகும். முஸ்லிம் மக்களை விரட்டிய தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனும் ஹக்கீம் 2002ம் ஆண்டில் சமாதான உடன்படிக்கையில் கைச்சாத்திட்டார்.என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment