அப்துல் அஸீஸ்-
கல்முனை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட உயர்தரம் கற்க்கும் சமுர்த்தி உதவி பெரும் மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்குவதற்க்கான நேர்முகப்பரிட்சையும், விழிப்பூட்டல் கருத்தரங்கும் நேற்று (04) கல்முனை பிரதேச செயலக மண்டபத்தில் இடம்பெற்றது .
இதில் மாணவர்களின் எதிர்கால முன்னெடுப்புகள் தொடர்பாக விழிப்பூட்டப்பட்டதுடன், 2வருடம்களுக்கு மாதாந்தம் 1000ரூபா வீதம் புலமைப்பரிசில் கொடுப்பணவு வழங்குவதற்க்கான நேர்முகப்பரிட்சையும் இடம்பெற்றது .
சமுர்த்தி தலைமைபீட முகாமையாளர் எ.ஆர்.எம். சாலிஹ் தலைமையில் இடம்பெற்ற இன் நிகழ்வுகளில் கல்முனை அல்-பஹ்ரியா மாக வித்தியாலய அதிபர் எம்.ஐ.அப்துல் ரசாக், பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் எம்.எ.எம்.எச்.மனாஸ் , மேலதிய மாவட்ட பதிவாளர் எஸ்.சைலஜா, சமுக பாதுகாப்பு நிதி பகுதிக்கான உத்தியோகத்தர் எம்.ஐ.எம்.மாஹிர் ஆகியோர்கள் கலந்துகொண்டனர்.
.jpg)
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment