இந் நாட்டில் தேர்தல் திணைக்களத்தல் பதியப்பட்ட 42 அரசியல் கட்சிகள் உள்ளன. அதில் முஸ்லீம் என்ற வசனத்தினை பிரதிபலிக்கின்ற ஒரே ஒரு கட்சி முஸ்லீம் காங்கரிஸ் கட்சி மட்டுமே உள்ளது. என பாராளுமன்ற உறுப்பினரும் ஸ்ரீ.ல. முஸ்லீம் காங்கிரசின் செயலாளர் ஹசன் அலி தெஹிவளையில் நடைபெற்ற கூட்டத்தில் தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
ஆனால் சிலர் முஸ்லீம் காங்கிரஸ் ஊடக வந்து அக் கட்சியில் இருந்து விலகி அஸ்ரப் கொங்கிரஸ ', தேசிய முஸ்லீம் காங்கிரஸ். அகில இலங்கை முஸ்லீம் காங்கிரஸ், கிழக்கு முஸ்லீம் காங்கிரஸ் என பல கட்சிகள் தோற்றுவித்தார்கள்.அவர்களுக்கு முஸ்லீம் என்ற பதத்தையே வைத்திருந்தால் நாம் இனவாதி எனக் காட்டப்படுவோம. என முஸ்லீம் என்ற பதத்தையே நீக்கிவிட்டார்கள்.
முஸ்லீம் என்று கட்சியை சொல்வதற்கே கூச்சப்படுபவர்கள் எவ்வாறு இந்த நாட்டின் வாழும் முஸ்லீம்களின் பிரச்சினையைகளைப் பேசப்போகின்றார்கள். இவ்வாறானவர்கள் எவ்வாறு முஸ்லீம்களிடம் போய் வாக்கு கேட்க முடியும்.
வட கிழக்கில் இருந்த ஆயுதக்குழுக்களிடமிருந்த ஆயுதங்கள் அப்போதைய காலத்தில் முஸ்லீம்; இளைஞர்களையும் கவர்ச்சி காட்டியது. அதனால் அன்று முஸ்லீம் வாலிபர்களும் அவ் இயங்கங்களில் சேருவதற்கு ஆர்வங்காட்டினார்கள். ஒரு சில இளைஞர்கள் போய்ச் சேர்ந்தார்கள். அந்த தருனத்தில்தான் மறைந்த தலைவர் எம். எச். எம் அஸ்ரப் அவர்கள் முஸ்லீம் இளைஞர்களை வழிமறித்து இந்த முஸ்லீம் போராட்ட இயக்கத்தினை ஆரம்பித்து அவர்களை ஒன்று திரட்டினார்.
வட கிழக்கில் முஸ்லீம்களுக்கு நடைபெற்ற அநீதிகள், யுத்தம் முடிவடைந்த பிறகு அதி தீவிர போக்குடைய பௌத்த குழுக்களின் தாக்குதல் கொண்ட அறிக்கையை நவநீதம் பிள்ளையிடம் கையளிக்கச் சென்றபோது நவநீதம் பிள்ளையின் கொழும்பில் உள்ள ஜ. நாடுகள் ஏற்பாட்டாளர்கள் அரசில் இருக்கும் யாரையும் சந்திக்க முடியாது அதற்கு அரசாங்கம் கட்டுப்பாடு எங்களுக்கு விதித்துள்ளது. நீங்கள் சந்திப்பதென்றால் அரசின் அனுமதி பெற்று வாருங்கள் எனத் தெரிவித்தனர். ஆனாலும் நவநீதம் பிள்ளை பயணிகக் 1 மணித்தியாலத் ப ன் முன் அவரைச் சந்தித்து இந்த அறிக்கையை மட்டும் நான் கையளிக்க வேண்டும் என கொழும்பில் உள்ள ஜ.நா.இலங்கைக்கான பணிப்பாளர் அவகாசம் கேட்டேன்
அதன் பின்னரே இந்த அறிக்கையை நவநீதம்பிள்ளைச் சந்தித்து கையளித்தேன். அவர் அதனை மேலோட்டமாக வாசித்துவிட்டு உரிய நடவடக்கை எடுப்பதாக அந்த அறிக்கையை அவர் எடுத்துச் சென்றார்.
அந்த அறிக்கையில் வட கிழக்கு யுத்த காலத்தில் முஸ்லீம்களுக்கு ஏற்பட்ட சகல சம்பவங்களும் அடங்கப்பெற்றுளளன. ஆதில் ஹஜ்ஜூக்கு சென்று காணமல் போனவர்கள் தொட்டு காத்தாகுடி, ஏறாவுர், வடக்கு முஸ்லீம்கள் வெளியேற்றம் என பல தகவல் அதில் அடங்குகின்றன.
யுத்தத்திற்குப் பிறகு இந்த அரசின் நடவடிக்கையினால் அதிலும் அம்பாறை மாவட்டத்திலும் மட்டும் முஸ்லீம்களுக்குரிய காணி 35 ஆயிரம் ஏக்கர் காணியை இழந்துள்ளோம். இதே போன்று அம்பாறை திருமலை, மட்டக்களப்பு மாவட்டத்திலும் முஸ்லீம் களுடைய இருப்புக்கள் யுத்தத்தின் பின்பும் முன்பும் அபகரிக்கப்பட்டுள்ளன.
இந்த அரசாங்கத்தின் கீழ் உள்ள காட்டுவள திணைக்களம், நகர அபிவிருத்தி மற்றும் நீர், விவசாய முதலீட்டு, பௌத்த ஆராச்சி என பல்வேறு திணைக்களங்கள் ஒன்று சேர்ந்து அம்பாறை மாவட்டத்தில் காணிகளை அபகரித்துள்ளன. இதனை அரசுடன் பேசினாலும் அதிகாரிகள் அரசின் திணகை; களங்கள் ஊடாக முஸ்லீம்களது காணிகள் அபகரிக்கப்படுகின்றன. என ஹசன் அலி தெரிவித்தார்.

0 comments :
Post a Comment