இலங்கை யாப்பு சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள மதச்சுதந்திரம் மறுக்கப்படுவது பற்றி முறையிடுவது எவ்வாறு நாட்டுத் துரோகமாகும்?

சட்டத்தரணி .எஸ்.எம். ஏ. கபூர்

ந்நாட்டின் அரசியல் யாப்பு சட்டத்தில் எமக்கு வழங்கப்பட்டுள்ள மதச்சுதந்திரத்திற்கு குந்தகம்  விளைவிக்கும் வகையில் முஸ்லிம் பள்ளிவாசல்கள் மட்டுமல்ல, இந்து கோயில்கள், கிறிஸ்தவ  தேவாலயங்கள் அவ்வப்போது தாக்கப்படும் போது அரசு கணக்கெடுக்காமலும் அதனைக் கண்டும்  காணாமலும் இருப்பது தொடர்பாக முஸ்லிம் காங்கிரஸ் முறையிட்டு அது சம்பந்தமாக அறிக்கை  சமர்பிக்கப்பட்டால் எவ்வாறு நாட்டு துரோகமாகும் என கேள்வி எழுப்பினார் முஸ்லிம்  காங்கிரசின் ஸ்தாபப் பொதுச் செயலளாரும் சூரா கவுன்சிலின் பிரதி தலைவருமான சிரேஷ்ட  சட்டத்தரணி எஸ்.எம். ஏ. கபூர் அவர்கள்.

மேல் மாகாண சபைக்கான தேர்தல் பிரச்சார கூட்டம் அண்மையில் கிரான்பாஸ் குடியிருப்பாளர்கள்  மைதானத்தில் ஜனாப் மொகமட் இர்சாம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற அப்பொதுக்  கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகையில் சட்டத்தரனி கபூர் அவர்கள் மேற்கண்டவாறு கருத்து 
தெரிவித்தார். இன்று சில அரசியல் வாதிகள் எங்கள் கட்சிக்கும் எமது தலைவருக்கும் எதிராக அநியாயமாகவும் அபாண்டமாகவும் சுமத்தப்படும் பொய் குற்றச் சாட்டுகளில் எவ்வித அடிப்படை  உண்மைத் தன்மைகளும் இல்லை எனவும் எமது மதத்திற்கு மட்டும் அல்ல ஏனைய சமய வழிபாட்டு ஸ்தலங்களுக்கு  ஏற்பட்ட விளைவுகள் பற்றியும் எங்கள் உரிமைகள் பற்றியும் குரல் கொடுப்பது ஒரு போதும்  அரச துரோகமாக கணிக்கப்படுவது இல்லை.

நாட்டுக்கு எதிராக எவ்வித சதிவேலைகளிலும் நாம் ஈடுபடவும் இல்லை. அது சம்பந்தமாக் புரட்சிகரமான  கருத்துக்களை வழங்கவும் இல்லை இந்நிலையில் இன்று பேரினவாத சக்திகள் சில ஒன்று பட்டு  எங்களுக்கு எதிராக வசைமாரி பொழிவதை நாங்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்வதற்கு தயார் இல்லை  எனவும் பல நூற்றாண்டுகளாக நாம் பின்பற்றி வரும் எங்கள் மத அனுஸ்ரானங்களுக்கு எவரும்  தடையாக இருப்பதை நாம் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள பேவதுமில்லை என அவர் மேலும் பேசுகையில் குறிப்பிட்டார்.

இக்கூட்டத்தில் முஸ்லிம் காங்கிரசின் தேசியத் தலைவரும் நீதி அமைச்சருமான ரவுப் ஹக்கீம்,  அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறப்பினர் பைசல் காசிம், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்  ஏ.தவம், கட்சியின் தேசிய அமைப்பாளர் சபீக் ரஜாப்டீன், முதன்மை வேட்பாளர் அப்துல் ஹை  உட்பட கட்சியின்; இன்னும் பல வேட்பாளர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்கள்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :