சலீம் றமீஸ்-
பொத்துவில் பிரதேசத்தில் வாழ்ந்து வரும் மூவின மக்களின் நன்மை கருதி தயட்ட கிருள திட்டத்தின் கீழ் உள்ளுராட்சி, மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாஉல்லா அவர்களின் ஏற்பாட்டில் பொத்துவில் ஆதார வைத்தியசாலைக்கு 67மில்லியன் ரூபா பெறுமதியான சத்திர சிகிச்சை உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு வைத்திய அத்தியட்சகர் டாக்டர் இஸ்ஸதீன் தலைமையில் இடம் பெற்றது.
இந்த வைபவத்தில் உள்ளுராட்சி, மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாஉல்லா பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.
இதில் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி,நீர்ப்பாசன அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை, கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் ஏ.எச்.எம்.அன்ஸார், பிரதி மாகாண சுகாதார பணிப்பாளர் டாக்டர் ஏ.எல்.அலாவுதீன், அமைச்சின் உதவிச் செயலாளர் எம்.ஐ.சலாஹூதீன், அமைச்சின் திட்டப் பணிப்பாளர் கே.பாக்கியராஜா, அமைச்சர் ஏ.எல்.எம்.அதாஉல்லாவின் பொத்துவில் பிரதேச இணைப்பாளர் ஏ.பதுர்கான், மாகாண அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பையின் மக்கள் தொடர்பு அதிகாரி எம்.எஸ்.ஜஃபர் உட்பட அரச உயரதிகாரிகள், வைத்தியர்களும், ஊழியர்களும் கலந்து கொண்டனர்.




0 comments :
Post a Comment