
ரைஸ்-கிண்ணியா நகரசபை முன்னெடுத்துவரும் புறநெகும அபிவிருத்தி திட்டங்கள் சம்பந்தமான கலந்துரையாடல் நேற்று நகரசபை கேட்போர் கூடத்தில் நகரபிதா டொக்டர் ஹில்மி மஹ்ரூப் தலைமையில் இடம்பெற்றது.
இக்கலந்துரையாடல் கிண்ணியா நகரசபையினால் முன்னெடுக்கப்பட்டுவரும் புறநெகும அபிவிருத்தி திட்டங்களில் ஒப்பந்தகாரர்களாக வேலைகளை மேற்கொண்டுவரும் ஒப்பந்தக்காரர்கள் கலந்து கொண்டதோடு அவர்களின் தற்போதைய வேலைகளின் நிலைமைகளை ஆராயும் விதமாக அமைந்தது.
இதன் போது நகரசபை முன்னெடுத்துவரும் புறநெகும அபிவிருத்தி சம்பந்தமாக மக்கள் முன்வைத்த முறைப்பாடுகள் சம்பந்தமாகவும், ஒப்பந்தக்காரர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் மேற்கொள்ளப்பட்டுவரும் புறநெகும அபிவிருத்தி திட்டங்களின் பின்னடைவுகள் அவற்றினை எவ்வாறு அதிகரிக்கும் அளவுக்கு கொண்டு செல்வது போன்ற விடயங்கள் சம்பந்தமாகவும் பேசப்பட்டது.
இக்கலந்துரையாடலின் போது நகரசபை நகபிதா டொக்டர் ஹில்மி மஹ்ரூப், நகரசபை உறுப்பினர் பாஜில் குத்தூஸ், பொறியியலாளர் வி.ராஜகோபாலன், நகரசபை செயலாளர் யாழினி நரேந்திரநாத், மற்றும் புறநெகும திட்ட பிரிவின் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment