மாமிசம் உண்பவர்களுக்கு மிருக உயிர்களின் வலியும் அதன் உயர்வும் தெரியாது - ஞானசார தேரர்



வருக்கும் ஐந்து சதமேனும் நஷ்ட ஈடாக வழங்கப்போவதும் இல்லை. நீதிமன்றத்தில் ஆஜராகப் போவதுமில்லையென பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார். 

வனங்களை அழித்து மனிதர்களையும், மிருகங்களையும் பலியாக்க எவருக்குமே இடமளிக்க மாட்டோமென்றும் தேரர் தெரிவித்தார்.

தனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் விதத்தில் பொதுபல சேனா பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் கருத்துக்களை வெளியிட்டுள்ளார் என்றும் எனவே, தேரர் மன்னிப்பு கேட்க வேண்டும் இல்லாவிட்டால் 500 மில்லியன் ரூபா நஷ்ட ஈடு கோரி வழக்கு தொடரப் போவதாகவும் அதற்கான சட்டத்தரணி ஊடாக கோரிக்கை கடிதம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.

இது தொடர்பாக கேட்டபோதே கலகொட அத்தே ஞானசார தேரர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தேரர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,.

யுத்தத்தால் முஸ்லிம்கள் மட்டுமல்ல தமிழர்கள், சிங்களவர்கள் என அனைத்து இனத்தவர்களும் இடம்பெயர்ந்தனர். அவ்வாறு இடம் பெயர்ந்த மக்களை வடக்கில் அவர்கள் வாழ்ந்த இடங்களிலேயே மீள் குடியேற்ற வேண்டும். 

அதைவிடுத்து தேசிய ரீதியாக பாதுகாக்கப்படும் வில்வத்து உட்பட வனாந்தரங்களை அழித்து முஸ்லிம் மக்களை மீள் குடியேற்ற இடமளிக்க முடியாது. இவ்வாறு வனாந்தரங்களை அழித் ததன் காரணமாகவே இன்று இலங்கையின் காலநிலை மாற்றமடைந்து உஷ்ணமான காலநிலை நிலவுகிறது. இதனால் இயற்கை சூழல் பாதிக்கப்பட்டதோடு மட்டுமல்லாது மனிதர்களும், மிருகங்களும் அழியும் நிலை தோன்றியுள்ளது.

இவ்வாறு குடியேற்றங்களை மேற்கொள்வோர் மாமிசம் உண்பவர்கள். அவர்களுக்கு மிருக உயிர்களின் வலி, உயர்வு தெரியாது. இயற்கை சூழலின் சுகாதாரத்தன்மை தெரியாது. எனவே, வனாந்தரங்களை அழிக்க எந்தக் கொம்பனுக்கும் இடமளிக்கமாட்டோம். அதேவேளை, எவருக்கும் ஐந்து சதத்தையேனும் நஷ்ட ஈடாக வழங்கப் போவதும் இல்லை. நீதிமன்றத்தில் ஆஜராகப் போவதுமில்லை. மன்னிப்பு என்ற பேச்சுக்கே இடமில்லையென்றும் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :