சாய்ந்தமருதிற்கு தனியான பிரதேச சபை வேண்டும் உலமா கட்சி பிரேரணை

எஸ்.அஷ்ரப்கான்-

சாய்ந்தமருதிற்கு தனியான பிரதேச சபை வேண்டும் என்ற கோரிக்கை மீண்டும் வலுப்பெற்று வருகின்ற நிலையில் கல்முனை மாநகர முன்னாள் முதல்வர் ஸிராஸ் மீராசாஹிப் இது விடயத்தில் மும்முரமாக ஈடுபடுவதற்கான முஸ்தீபுகளில் ஈடுபட்டு வருகிறார். 

இது விடயமாக முஸ்லிம் மக்கள் (உலமா) கட்சியால் பிரேரணை ஒன்று முன்வைக்கப்படுவதாக அதன் தலைவர் முபாறக் அப்துல் மஜீட் தெரிவித்துள்ளார்.

அவரால் முன் வைக்கப்பட்டள்ள பிரதேச சபை பற்றிய பிரேரணையில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

சாய்ந்தமருதுக்கு தனியான பிரதேச சபை என்ற விடயத்தில்
கல்முனை டவுனை தனியான கிராம சேவகராக பிரிவாக பிரித்து அதனை கல்முனை தெற்குடன் அதாவது கல்முனை முஸ்லிம்பிரதேச செயலகத்துடன் இணைத்தல். 

இஸ்லாமாபாத் கிராமமும் இதற்குள் வரும்.
கல்முனை நீதி மன்ற வீதியிலிருந்து மருதமுனை வரை கல்முனை வடக்கு பிரதேச செயலகமாக இருத்தல். நற்பிட்டிமுனைமக்கள் கல்முனை தெற்குடன் இணைவதா? வடக்குடன் இணைவதா? என்பது பற்றி அவர்களே முடிவெடுக்க விடல்.

இவ்வாறான பிரதேச செயலகங்கள் காலப்போக்கில் பிரதேச சபையாக மாறலாம். இதற்கான அடிப்படையை வைத்தே தமிழர்கள்தமக்கென பிரதேச செயலகத்தை கோருகிறார்கள்.

நாட்டில் உள்ள அரசியல் யாப்பின் பிகாரம் இன ரீதியிலான பிரதேச செயலகங்களோ, பிரதேச சபைகளோ உருவாக்க முடியாது.இதனாலேயே கல்முனை வடக்கு பிரதேச சபை தேவை என்பதை தமிழ் மக்கள் எழுதி வருகிறார்கள். நம்மை விட தமிழ் மக்கள்;புத்திசாலித்தனமாக, தந்திரமாக காய் நகர்த்தலை செய்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். முஸ்லிம் சமூகம்எதற்கெடுத்தாலும் சோடா போத்தல் போன்றே கருத்துச்சொல்லும். ஆகவே மருதமுனையும் கல்முனை வடக்கு பிரதேசசபைக்குள் வரும்.
எம்மால் இது முடியாது. இதற்கெல்லாம் இடம் கொடுக்க முடியாது என நாம் சொல்லலாம். ஆனால் கால ஓட்டம் என்பதுஎப்போதுமே நமக்கு சாதகமாக இருக்காது. அல்லது இந்த ஒரு விடயத்தை வைத்தே நாம் ஒரு வழியில் அடிமைப்படுத்தப்படலாம். இந்த அடிமைப்படுத்தலின் எதிரொலியே அண்மைய அரசுக்கு ஆதரவான முஸ்லிம்களின்ஆர்ப்பாட்டம்.

ஆகவே தான் தூர நோக்கு கொண்டு நாம் இதனை சொல்கிறோம். நாம் சொல்வதில் பிழை என கருதுபவர்கள் இதற்கானமாற்றீட்டை முன் வைக்க வேண்டும். அதுதான் புத்திசாலித்தனம். வெறுமனே பிரதேச சபை வேண்டும் என்பதை கூறுவதைவிட அதிலுள்ள சாதக பாதகங்களை விளங்கி அந்த விடயத்தில் முன்னின்றால் வெற்றியளிக்கும் என்பதையும் குறிப்பிட விரும்புகின்றோம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :