இராணுவத்தினரின் காலில் விழுந்து எனது 3 சகோதரர்களையும் விடுமாறு கதறி அழுதேன் -சாந்தா

த.நவோஜ்-

ராணுவத்தினரின் காலில் விழுந்து எனது 3 சகோதரர்களையும் விடுமாறு கதறி அழுதேன் விசாரணையின் பின்பு விடுதலை செய்கிறோம் என்று கூறி அழைத்துச் சென்றார்கள் இது வரையில் அவர்களை விடவில்லை. என்று 1990.08.02இல் காணமற் போனவர்களான வீரபத்திரன் பொன்னுத்துரை வயது (30) வீரபத்திரன் அருள்நாதன் வயது (22) வீரபத்திரன் சசிதரன் வயது (15) ஆகியோர்களின் சகோதரியான சேர்மன் வீதி முறக்கொட்டான்சேனையைச் சேர்ந்த வீரபத்திரன் சாந்தா வயது(50) என்பவர் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் சாட்;சியமளித்தார்.

அவர் தொடர்ந்து சாட்சியமளிக்கையில் கண்ணீர் மல்க கூறியதாவது......

1990 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இராணுவத்தினர் முறக்கொட்டான்சேனை பாடசாலை வளவினையும் அதனைச் சுற்றிவரவுள்ள சில காணிகளிலும் முகாமிட்டிருந்தனர். இதில் எங்களது வீடும் அடங்கும். இதானால் அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் அச்சத்தின் காரணமாக இடம்பெயர்ந்து பாதுகாப்பிற்காக சித்தாண்டி முருகன் கோயிலில் சென்று தஞ்சம் அடைந்திருந்தார்கள்.

அப்பபோது அவ்விடம் ஒரு அகதி முகாமாகவே காணப்பட்டது. ஊரில் இருந்த பலபேர் இவ்வகதி முகாமிலேயே இருந்தார்கள்.

அங்கு சென்று சில நாட்களில் இராணுவத்தினர் சுற்றி வளைத்து அங்கு கொண்டுவரப்பட்டிருந்த முகமூடி பொம்;மையாக இருந்தவரிடம் ஒவ்வொருவராக காட்டி எனது சகோதரர்கள் 3 பேர்கள்; உட்பட எல்லாமாக 17 பேர்களை அழைத்துக்கொண்டு சென்றனர். எனது சகோதரர்கள் எந்த பயங்கரவாத இயக்கத்துடனும் தொடர்பு இல்லாதவர்கள். அவர்களை விடுமாறு அவ்வேளை காலில் வீழ்ந்து அழுதேன். அவர்கள் இரக்கம் காட்டவில்லை. என்று கதறி அழுதார்.

கொழும்பு, களுத்துறை, உள்ளி;ட்ட பல இடங்களிலும் உள்ள சிறைச்சாலைகளிலும் சென்று தேடி அலைந்தோம். எதுவித தகவலும் கிடைக்கவில்லை. எங்கு சென்று கேட்டாலும் இல்லையென்று கூறுகிறார்கள்.

அன்மையில் முறக்கொட்டான்சேனை முகாமில் இருந்து எமது வீட்டிற்கு வந்த இராணுவத்தினர். உங்களது சகோதரர்களின் பிறப்பு சான்றிதழ்களை தருமாறும் அவர்ளை தேடித்தருவதாகவும் கூறியிருந்தார்கள். வன்செயழில் பழுதடைந்து விட்டதாக அவர்களிடம் தெரிவித்தோம்.

எனது சகோதரர்கள் இரண்டு பேர்கள் கல்வி கற்றுக்கொண்டிருந்தார்கள். மூத்த சகோதரர் தேனீர் கடை வைத்திருந்தார். எனது சகோதரர்கள் எப்போது வருவார்கள் என்று அம்மா எதிர்பார்புடன் உள்ளார். எனது தந்தையார் இவர்களின் நினைவால் ஏக்கத்துடன் இறந்து விட்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :