கடந்த 8 - ம் தேதி 239 பயணிகளுடன் புறப்பட்டு சென்று மாயமானதாக தேடப்பட்டு வந்த மலேசிய விமானம், இந்திய பெருங்கடலில் விழுந்து நொறுங்கியதாக 16 நாட்களுக்கு பிறகு மலேசிய பிரதமர் நஜீப் ரசாக் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அதில் பயணம் செய்த அனைவரும் பலியாகி இருக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார்.
அந்த விமானத்தில் பயணம் செய்த தங்களது உறவினர்கள் உயிருடன் திரும்பி வருவார்கள் என்ற நம்பிக்கையுடன் மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் செலவில் சீனத் தலைநகர் பீஜிங், மலேசிய தலைநகர் கோலாலம்பூர் ஆகிய இடங்களில் உள்ள ஓட்டல்களில் தங்கியிருந்தவர்களுக்கு இந்த செய்தி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனையடுத்து, கோலாலம்பூர் மற்றும் பீஜிங் நகரில் உள்ள மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவன அலுவலகங்களின் முன்பு விபத்துக்குள்ளான விமானத்தில் சென்ற பயணிகளின் உறவினர்கள் இன்று காலை முதல் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், விபத்துக்குள்ளான விமானத்தில் பயணம் செய்து பலியான 239 பயணிகளின் உறவினர்களுக்கும் தலா 5 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்புக்கு சுமார் 3 லட்சம் ரூபாய்) இழப்பீடாக வழங்கப்படும் என்று மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment