முஸ்லிம்களின் பேரம் பேசும் அரசியல் சக்தியை தக்க வைத்துக்கொள்வது காலத்தின் கட்டாயம்-இல்ஹாம்

இ. அம்மார்

ண்மைக்காலமாக எமது சமூகம் அரசியல் ரீதயாகவும், சமூக ரீதியாகவும் பாதிக்கப்பட்டு வருவதையும், இதனால் எமது சமூகம் எதிர்கொள்ளக் கூடிய கல்விப்பிரச்சினை, பொருளாதாரப்  பிரச்சினை என்று பட்டியலிட்டுக் கொண்டே போகலாம். ஆனால் இத்தனைக்கும் எம்மத்தியில்  ஏதாவது தீர்வு உள்ளதா கிட்டியுள்ளதா எனச் சிந்தித்துப் பார்த்தால் இதுவரைக்கும் இல்லையென்றே  கூற வேண்டும். இன்னும் நாங்கள் திட்டமிட்டு செயல்படாத சமூகமாகவே நாங்கள் இருந்து  கொண்டிருக்கின்றோம் என்று கொழும்பு மாவட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின்  வேட்பாளர் இல்ஹாம் மரைக்கார் தெரிவித்தார்.


அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில் இதற்குக் காரணம் எமது சமூகம் அரசியல் ரீதியாகவும் அமைப்புக்கள் ரீதியாகவும் பிளவுபட்டு  வேலி பயிரை மேய்வது போன்று எமது எமகு குறுகிய அரசியல் இலாபத்திற்காக அடகு வைத்தும்,  காட்டிக் கொடுத்தும் எமது பலத்தை நாமே கூறுபோட்டுக் கொண்டு மாற்று சமூகத்திற்கும் பேரின  வாத அரசியல் சகத்திகளுக்கும் தீனி போட்டுக்கொண்டு இருப்பதை முஸ்லிம் சமூகம் என்ற  ரீதியில் நாம் ஏற்றுக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம்.

இந்த நிலைமை மாற்றமடைய வேண்டும். எமது அடுத்து தலைமுறை தலை நிமிர வேண்டும். நம்மை நாமே  ஆளும் அரசியலை எம்மத்தியில் விட்டுச் சென்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பெருந்தலைவர் எம். எச.;. எம். அஷ;ரப் இன் கனவு நனவாக வேண்டும். அதற்கான பணியில் நாம் அனைவரும்  அரசியல் நிறம், அமைப்பு ரீதியான தடைகளைத் தகர்த்து ஒன்று பட வேண்டும்.

கொழும்பு மாவட்டத்தில் முஸ்லிம்களின் கல்வித் தரத்தை மேம்படுத்துவதுடன் ஸ்ரீலங்கா  முஸ்லிம் காங்கிரஸின் எதிர்காலத் திட்டங்களை பொறுப்பேற்று தேர்தலோடு மட்டும்  மட்டுப்படுத்தப்படாமல் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் எதிhகால திட்டங்கள் குறித்து இணைந்து செயல்பட வேண்டும் என்ற தேசிய தலைவர் ரவூப் ஹக்கீம் கேட்டுக் கொண்டார்.

நான் கல்விமான் என்பது மட்டுமல்லாமல், ஒரு தனியார் கல்லூரியின் தலைவர் என்ற  ரீதியில் எமது சமூகத்தின் கல்வி நிலை குறித்து நன்கு அறிந்தவனாகவே இருக்கின்றேன். வெளி மாவட்டங்களில் வளப் பற்றாக்குறை, ஆசிரியர் பற்றாக்குறை என்று பல  குறைபாடுகள் இருந்தும் க. பொ. த. சாதாரண தரம், உயர் தரம், ஐந்தாம் ஆண்டு புலமைப்  பரீட்சைகளின் பெறுபேறுகளையும் , கொழும்பு பிரதேசத்தின் குறிப்பாக முஸ்லிம் பாடசாலைகளின் சகல வசதிகளையும் கொண்ட பிரபல பாடசாலைகளின் கல்வி நிலையும், வெளிமாவட்ட  பாடசாலைகளின் பல்கலைக்கழக பிரவேசம் குறித்தும் சிந்தித்துப் பாருங்கள் புரியும்.

எமது  சமூகத்தின் கல்வி நிலைப்பாடும், கொழும்பு மாணவர்களின் கல்வித் தாகமும். இதனையே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் எதிர்கால கல்வி மேம்பாட்டு திட்டமாகவும்  கொழும்பின் கல்வி மறுமலர்ச்சித் திட்டமாகவும் முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளது. இத்திட்டத்தினை  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் அவரது நேரடிக் கண்காணிப்பில்  முன்னெடுக்கவுள்ளது, தேசிய தலைவரின் கல்வி மறுமலர்ச்சிக்கான ஆக்கபூர்மான  செயற்திட்டங்களை வடிவமைத்து முன்னெடுத்துச் செல்வதற்கு எமது கல்வி ஆய்வாளர்கள் , எமது கல்வி  ஆலோசனைகள், அநுபசாலிகளையும் ஒன்று திரட்டும் பணிகளை என் மீது சுமத்தியுள்ளார்.

முஸ்லிம் சமூகம் கல்வியில் தன்னிறைவு காண்பதன் மூலம் மட்டுமே எமது அனைத்து தேவைகளையும்  உரிமைகளையும் பெற்றுக் கொள்ள முடியும் என்பதால் நாம் இந்தப் பணியில் அயராது பாடு பட  வேண்டும். எனவே எமது இந்தப் பயணத்தில் இணைய வேண்டும். குறிப்பாக முஸ்லிம் அமைப்புக்களின்  பிரமுகர்கள் அரசியல் எமக்குத் தேவை இல்லை என்று கூறிக் கொண்டு செயல்படும் அரச  சார்பற்ற அமைப்புக்களாக எனக் கூறிக் கொள்வது சரியான நேரத்தில் எடுக்கும் பிழையான  தீர்மானமாகும். உலகத்திற்கு  அரசியல் கலாச்சாரம், சமூகப் பணி என்ற அனைத்தையும் இஸ்லாம் தெட்டத்  தெளிவாக அறிமுகப்படுத்தியுள்ளது. எமது உயரிலும் மேலான நாயகம் (ஸல்) அவர்கள் என்றால்  அதனை யாராலும் மறுத்துரைக்க முடியாது. இப்படியான வரலாற்றைக் கொண்ட நாம் இன்று அமைப்பு 

ரீதியாக பிளவு பட்டும், மஸ்ஜீதுகளில் நாம் அரசியல் பேசக் கூடாது என்றும் வாதியிட்டு  வருகின்றோம். எனவே எங்ளுக்கிடையே உள்ள விதண்டாவாத்தை கைவிட்டுப் போட்டு யதார்த்தனை  உணர்ந்து நாம் அனைவரும் உடனடியாக சமூக தேவைக்காக தீர்மானங்களை முன்னெடுக்க வேண்டும்.  நாங்கள் ஒன்று படுவோம் சமூகத்தைப் பாதுகாப்போம் என்று கூறினார்.








இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :