ஜம்இய்யதுஷ்ஷபாபின் அனுசரனையின் கீழ் கல்குடா தவ்ஹீத் ஜமாஅத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும் 19ம் திகதி மீராவோடை எம்.பி.சி.எஸ் வீதியில் அமைந்துள்ள தாருஸ்ஸலாம் பள்ளிவாயலில் இலவச கண் சத்திர சிகிச்சைக்காக நோயாளிகளை இனங்காணும் கண் பரிசோதனை முகாம் காலை 11.00 மணிக்கு நடைபெறவுள்ளது.
கண்களில் வெள்ளை படர்தல் நோயுள்ளவர்களை இனங்கண்டு அவர்களுக்காக முற்றிலும் இலவசமாக சத்திர சிகிச்சைகளை பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த வைத்திய நிபுணர்கள் செய்யவுள்ளனர்.
இவ்வருடம் கிழக்கு மாகாண மக்களுக்காக சத்திர சிகிச்சைகள் காத்தான்குடி வைத்தியசாலையில் நடைபெறவுள்ளன. நோயாளிகளை இனங்காண்பதற்கான இம்முகாமில் அனைத்து இன மக்களும் கலந்து பயன்பெறுமாறு கல்குடா தவ்ஹீத் ஜமாஅத்தின் பொதுச் செயலாளர் மௌலவி எஸ்.எச்.எம் அறபாத் ஸஹ்வி கேட்டுக் கொண்டுள்ளார்.
முகாம் தொடர்பான மேலதிக தகவல்களுக்காக 0777761479 என்ற தொலைபேசி இலக்கத்தை தொடர்பு கொள்ளவும்.

0 comments :
Post a Comment