அக்கரைப்பற்று பிரதேச சபையின் புதிய கட்டிடம் கோலாகலமாக திறந்து வைப்பு - படங்கள் இணைப்பு




ஏ.ஜே.எம்.ஹனீபா,எம்.ஜே.எம்.சஜீத்-

னாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் வழிகாட்டலுடன் உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சின் 15 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள அக்கரைப்பற்று பிரதேச சபையின் புதிய கட்டிடம் இன்று (28) மாலை கோலாகலமாக திறந்து வைக்கப்பட்டது.

அக்கரைப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.றசீக் தலைமையில் நடைபெற்ற இவ் வைபவத்தில் பிரதம அதிதியாக உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சரும் தேசிய காங்கிரஸின் தேசிய தலைவருமான ஏ.எல்.எம்.அதாஉல்லா கலந்து கொண்டு கட்டிடத்தினை திறந்த வைத்தார்.

கௌரவ அதிதிகளாக கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன், உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சின் சிரேஷ;ட பிரதிச் செயலாளர் அப்துல் மஜீட், அக்கரைப்பற்று மாநகர முதல்வர் அதாஉல்லா அஹமட் சக்கி, சம்மாந்துறைப் பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எம்.எம்.நௌஷாட், அம்பாறை மாவட்ட உள்ளுராட்சி உதவி ஆணையாளர் ஏ.ஜே.எம்.இர்ஷாட், அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் உட்பட திணைக்கத் தலைவர்கள் மாநகர மற்றும் பிரதேச சபைகளின் உறுப்பினர்கள் உட்பட பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :