தொடக்க வீரர்களாக பேட்டிங்கைத் தொடங்கிய பின்ச் 16 ரன்னிலும், வார்னர் 20 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். பின்னர் வந்த அதிரடி வீரர் மேக்ஸ்வெல் 22 பந்துகளில் 45 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இதன் பின்னர் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்தன. பின்வரிசை வீரரான ஹாட்ஜின் அதிரடியால் (35 ரன்), ஆஸ்திரேலியா 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்கள் குவித்தது.
இதையடுத்து 179 ரன்கள் என்ற கடின இலக்கை நோக்கி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு, கெயிலும் ஸ்மித்தும் முதல் விக்கெட்டுக்கு 50 ரன்கள் குவித்து நம்பிக்கை அளித்தனர். பின்னர் அதிரடி காட்டிய கெயில், 53 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அதன் பின்னரும் இரண்டு விக்கெட்டுகளை வெஸ்ட் இண்டீஸ் அணி இழந்ததால் ஆட்டம் ஆஸ்திரேலியா பக்கம் திரும்பியது. எனினும் டேரன் சமியும் பிராவோவும் கடுமையாக போராடினர். ஆட்டத்தின் 19-வது ஓவரில் 21 ரன்கள் எடுத்தனர். இதனால் கடைசி ஓவரில் வெற்றிக்கு 12 ரன்கள் தேவைப்பட்டபோது பதற்றமின்றி விளையாடிய சமி 3வது மற்றும் 4வது பந்தில் அடுத்தடுத்து சிக்சர் அடித்து அணியை வெற்றி பெற வைத்தார்.
இதனால் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணி அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்கிறது. ஆஸ்திரேலியாவின் அடுத்த சுற்று வாய்ப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்டது.

0 comments :
Post a Comment