ஏ.ஜி.ஏ.கபூர் -
இயற்கையை ரசிப்பதற்காகவும், சுத்தமான காற்றை சுவாசிப்பதற்காகவும், பொழுது போக்கிற்காகவும், நாளாந்தம் பல்வேறு வேலைப் பளு காரணமாக ஏற்படும் மன அழுத்தத்திலுருந்து விடுபட்டு ரிலக்ஸ் பெறவும், தனது பிள்ளைகள் உள்ளிட்ட குடும்பத்தினருடன் சந்தோஷமாக இருப்பதற்காகவும் அக்கரைப்பற்று மாநகர மக்கள் அதிகமாக வருகை தரும் இடமான அக்கரைப்பற்று கடற்கரைப் பிரதேசம் முறையான சுத்திகரிப்பு இன்மையாலும்; இங்கு வரும் மக்கள் பயன்படுத்தும் பொலித்தீன் உட்பட்ட கழிவுகளாலும் அசுத்தமாகக் காணப்படுவதால் இங்கு வரும் மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளது.
எனவே அதனை துப்பரவு செய்து கடற்கரைப் பிரதேசத்தை டோலர் முலம் சமப்படுத்தி மக்கள் பயன்படுத்திய பின் வீசும் பொலித்தீன் உள்ளிட்ட கழிவுகளைச் சேகரிப்பதற்கு கொங்கிறீட் சிலிண்டர்களை ஆங்காங்கு வைக்கவும், கடற்கரைப் பிரதேச மெங்கும் நிழல்தரும் மரங்களை நட்டு பசுமைப் பிரதேசமாக மாற்றுவதோடு மின்னொளி வசதிகளை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அக்கரைப்பற்று பொலிக்கன் சமுக சேவை நிறுவனம் மேற் கொண்டுள்ளது.
இந் நடவடிக்கைகளுக்கு அக்கரைப்பற்று மா நகர சபையின் ஒத்துழைப்பைப் பெற்றுக் கொள்ளும் பொருட்டு மாநகர மேயர் அதாஉல்லா அஹமட் ஸக்கி அவர்களை பொலிக்கன தலைவரும், உதவிக் கல்விப் பணிப்பாளருமான என்.ரி.ஜமால்தீன் மற்றும் செயலாளர் எம்.மர்சூக் முதலியோர் தலைமையிலான குழுவினர் சந்தித்து கலந்துரையாடலொன்றை மேற் கொண்டனர்.
இதன் பயனாக நேற்று முன்தினம் கடற்கரைப் பிரதேசத்திற்கு வருகை தந்த அக்கரைப்பற்று மாநகர மேயர் அதாஉல்லா அஹமட் ஸக்கி பொலிக்கன் குழுவினருடன் இணைந்து கடற்கரைப் பிரதேசம் முழுவதையும் பார்வையிட்டதோடு, அங்கு சமுகமளித்திருந்த விவசாய திணைக்கள பிரதிப் பணிப்பாளர் வை.பி..இக்பால், தென் கிழக்குப் பல்கலைக்கழக பொறியியல் துறைத் தலைவர் பொறியியலாளர் கலாநிதி ஏ.எம்.முஸாதீக் ஆகியோர்களுடன் கலந்துரையாடினார். நல்ல சுழலைப் பாதுகாத்து பசுமைப் புரட்சியை ஏற்படுத்தும் இவர்களின் இந்த திட்டத்தை செயற்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக உறுதியளித்ததோடு, தற்போதைய நிதி பற்றாக்குறை காரணமாக நல்லதொரு அரச சார்பற்ற நிறுவனமொன்றின் உதவியுடன் இத் திட்டத்தை செயற்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற் கொள்வதாகவும் மேயர் உறுதியளித்தார்.
புpரதி வெள்ளிக் கிழமை தோறும் கடற்கரைப் பிரதேசத்தை பொலிக்கன் சொஸைட்டியினர் துப்பரவு செய்து வருகின்றனர்.
கடற்கரைப் பிரதேசத்தை மேயர் அதாஉல்லா அஹமட் ஸக்கி அவர்கள் பொலிக்கன் குழுவினருடன் இணைந்து பார்வையிடுவதைப் படத்தில் காணலாம்.
.jpg)


0 comments :
Post a Comment