வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள கிண்ணையடி கிராமத்திற்குள் புதன்கிழமையன்று இரவு புகுந்த காட்டு யானை ஒன்று கிராமத்தின் பல பகுதிகளிலும் அட்டகாசம் புரிந்துள்ளதாக கிராம வாசிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
குறித்த தினமன்று கிண்ணையடிக்கு குறுக்கே செல்லும் ஆற்றின் ஊடாக மக்கள் குடியிருப்பிற்குள் புகுந்த யானையானது குடியிருப்பு காணியில் இருந்த தென்னை மரம், வேலிகள், அரிசி ஆலை போன்றவற்றையும் சேதப்படுத்தியதுடன், அரிசி ஆலையின் வைக்கப்பட்ட தவீட்டு மூடையையும் உணவாக உட்கொண்டு விட்;டு சென்றுள்ளது.
இராணுவத்தினரின் உதவியுடனேயே அதனை தாம் துரத்தியதாக கிராமவாசிகள் தெரிவித்தனர்.
இவ் யானையானது அருகிலுள்ள முருக்கன் தீவு, பிரம்படித் தீவு, போன்ற இடங்களில் உள்ள அடர்ந்த காட்டுப்பகுதிகளில் இருந்தே ஊருக்குள் வருவதாகவும், இதனால் அச்சமடைந்து காணப்படுவதாகவும், உரிய அதிகாரிகள் இதற்கான நடவடிக்கையை எடுத்துத் தருமாறு பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
.jpg)


0 comments :
Post a Comment