சுலைமான் றாபி-
விளையாட்டுக் கழகங்களின் அபிவிருத்தியினைக் கருத்திற்கொண்டு அதன்மூலம் நிந்தவூர் பொது விளையாட்டு மைதானத்தினை அபிவிருத்தி செய்வது சம்பந்தமான விஷேட கலந்துரையாடல் இன்று (17.03.2014) இரவு 8.30 மணியளவில் பாராளுமன்ற உறுப்பினர் பைசல் காசிம் அவர்களின் இல்லத்தில் இடம்பெற்றது . இதில் நிந்தவூரில் காணப்படும் விளையாட்டுக் கழகங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் பற்றியும் குறிப்பாக நிந்தவூர் பொது விளையாட்டு மைதானத்தின் தற்போதய நிலவரம் மற்றும் எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்தப் படவேண்டிய அபிவிருத்தி பற்றியும் விளக்கம் கோருவதற்கே இந்த சந்திப்பு இடம்பெற்றிருந்தது.
இதில் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் அவர்கள் :
இம்முறை ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மேலதிகமாக 25 மில்லியன் ரூபா நிதி ஒதிக்கீடு செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் முதல் கட்டமாக நிந்தவூரில் இனங்காணப்பட்ட மூன்று குறைகள் உள்ளது அவற்றில்
1. கலாச்சார மண்டபம்
2. பொது விளையாட்டு மைதானம்
3. ஆயுர் வேத வைத்தியசாலை
இந்த மூன்று பெரும் குறைகளை தற்போது நிபர்த்தி செய்யும் காலம் கனிந்துள்ளதாகவும் அவைகளுக்குண்டான சகல நடவடிக்கைகளையும் தான் எடித்திருப்பதாகவும் குறிப்பிட்டார். இதேவேளை ஜனாதிபதி அவர்களின் விஷேட திட்டத்தின் கீழ் விளையாட்டு மைதானங்களை அபிவிருத்தி செய்வதற்காக மாகாண , மாவட்ட மற்றும் பிரதேச மட்டங்களுக்கு விளையாட்டு அரங்கு (Stadium ) உட்பட எல்லா வசதியும் கொண்ட ஒரு விளையாட்டு மைதானம் அமைக்கபடுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. எனவே இந்த திட்டத்தின் மூலம் நிந்தவூரில் பெரும் குறையாகக் காணப்படும் விளையாட்டு மைதானத்தினை அபிவிருத்தி செய்ய தீர்மானித்திருப்பதாகவும், அதற்காக விளையாட்டுத்துறை அமைச்சரை சந்தித்த போது அமைச்சர் இணங்கியதாகவும் தெரிவித்தார்.
இதேவேளை பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மேலதிகமாக வழங்கப்பட்டுள்ள பணத்திலிருந்து இந்த மைதானத்தை அபிவிருத்தி செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் இதற்கு பிரதேச சபையின் ஒத்துழைப்பு அவசியம் என்றும் சுட்டிக்காட்டினார். மேலும் தற்போது காணப்படும் மைதானத்தில் ஒரே தடவையில் உதைபந்தாட்டப் போட்டிகள் நடைபெறுவதில் சிக்கல்கள் இருந்தால் உதைபந்தாட்ட மைதானம் அமைப்பதற்காக நிந்தவூர் வௌவாலோடையில் காணப்படும் நூறு வீட்டுத்திட்டதிற்கு முன்னால் உள்ள காணியில் உதைபந்து மைதானம் ஒன்றினை அமைக்க உத்தேசித்துள்ளதாகவும் தெரிவித்தார். அதேவேளை உள்ளக விளையாட்டுக்களை ஊக்கு விக்க அதற்கென்று தனியான மைதானத்தின் அவசியம் பற்றியும் விளையாட்டுக் கழகங்கள் பாராளுமன்ற உறுப்பினரின் கவனதிற்ற்கு கொண்டுவந்தது.
மேலும் இந்த கலந்துரையாடலில் நிந்தவூர் கலாச்சார மண்டபம் பற்றி எமது செய்தி சேவை கேட்ட போது.. நிந்தவூர் கலாச்சார மண்டபமானது இன்னும் ஓரிரு வாரங்களில் அதன் மதிப்பீட்டு வேலைகள் ஆரம்பிக்கப் படவுள்ளதாகவும், இதற்காக வேண்டி கட்டிட திணைக்களத்தின் (Building Department )உதவிகள் பெறப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் விளையாட்டு மைதான அபிவிருத்தி விடயத்தில் நிந்தவூர் பிரதேச செயலாளர் மற்றும் பிரதேச சபையுடன் ஒன்றிணைந்து பதிவு செய்யப்பட்ட விளையாட்டுக் கழகங்களின் தலைவர்களை உள்வாங்கி
ஒரு குழுவினை அமைத்து செயற்படத்தீர்மானித்துள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.
இந்த விஷேட சந்திப்பில் நிந்தவூர் இம்றான், லகான், கென்ட், சதாம், சோண்டேர்ஸ், மதீனா, அறபா, அட்வென்ச்சர், முத்தகீன், நெஸ்கோ, ரியல் இம்றான் மற்றும் சண் ரைசெஸ் லிபியா ஆகிய கழகங்கள் கலந்து கொண்டன.
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment