த.நவோஜ்-
திருகோணமலை மாவட்டத்தின் வெருகல் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கறுக்காமுனை தில்லங்குழி ஆறு சிரமதானத்தின் மூலம் துப்பரவு செய்யப்பட்டு ஆற்றை மூடிக்கிடந்த சல்பீனியா தாவரங்களும் மற்றும் நீர் மூடித் தாவங்களும் ஏனைய கழிவுகளும் அகற்றப்பட்டன.
ஈச்சிலம்பற்று, கறுக்காமுனை, இலங்கைத்துறை, சின்னக்குளம், உடப்புக்கேணி ஆகிய கிராமத்தவர்கள் இந்த ஆற்றைத் தமது குளிப்பு மற்றும் மீன்பிடிக்காக பயன்படுத்தி வந்திருந்தனர்.
ஆயினும் இந்த ஆறு நீண்டகாலமாக சல்பீனியாத் தாவரங்களாலும் இதர கழிவுகளினாலும் மூடப்பட்டுக் கிடந்தது.
இதனை கிராமத்தவர்கள், சமுர்த்தி பயனாளிகள், சமூர்த்தி உத்தியோகத்தர், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்;, கிராம உத்தியோகத்தர் என எல்லோருமாக இணைந்து சிரமதானத்தின் மூலம் துப்புரவு செய்துள்ளனர்.
கறுக்காமுனை தில்லங்குழி ஆறு சிரமதானத்தின் மூலம் துப்புரவு செய்யப்பட்ட பின்னர் தற்சமயம் மீண்டும் மக்கள் இந்த ஆற்றை நீராடுவதற்கும் மற்றும் இன்னபிற தேவைகளுக்குமாக நீரைப் பெற்றுக் கொள்வதற்கும், மீன் பிடிப்பதற்கும் ஆரம்பித்துள்ளனர் என்று பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் சிவகலா சோமசுந்தரம் தெரிவித்தார்.
சுமார் 500 மீற்றர் நீளமான ஆற்றின் பகுதி பொதுமக்களால் துப்பரவு செய்யப்பட்டுள்ளது.
.jpg)
.jpg)

0 comments :
Post a Comment