நாடு திரும்பவுள்ள இலங்கைக்கான பலஸ்தீன் தூதுவர் கலாநிதி அன்வர் அல் அகாவிற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தினால் இன்று செவ்வாய்க்கிழமை (18) பிரியாவிடை வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வு கொழும்பிலுள்ள பலஸ்தீன் தூதுவராலயத்தில் இடம்பெற்றது. இதன்போது பலஸ்தீன் தூதுவர் கலாநிதி அன்;வர் அல் அகாவின் சேவையினை பாராட்டி ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தினால் நினைவுச் சின்னமொன்று கையளிக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என்.எம்.அமீன், பொதுச் செயலாளர் றிப்தி அலி, பிரதித் தலைவர் எப்.எம்.பைரூஸ், செயற்குழு உறுப்பினர்களான ஹில்மி முஹம்மத், புர்கான் பீ. இப்திகார் மற்றும் எஸ்.எம்.அஸ்கர் கான் ஆகியோர் கலந்துகொண்டனர்.
தேவையான சந்தர்ப்பத்தில் இலங்கை முஸ்லிம்களுக்காக குரல் கொடுத்தமைக்கான பலஸ்தீன் தூதுவருக்கு மீடியா போரத்தின் தலைவர் என்.எம்.அமீன் இதன்போது நன்றி தெரிவித்தார்.
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment