எம்.வை.அமீர்-
மாணவர்களின் சேமிப்பு பழக்கத்தை ஊக்குவித்து அவர்களின் கல்வி மேம்பாட்டுக்குத் தேவையான நிதியினை சுயமாக அவர்கள் முகாமை செய்யக்கூடிய பழக்கவழக்கங்களை ஊக்குவிக்கும் நடவடிக்கையாக கடந்த 07.03.2014- ஆந் திகதி தொடக்கம் 22.03.2014 வரை சேமிப்பு வாரமாக கொண்டாடப்படுகின்றது.
இந் நிகழ்வானது சம்மாந்துறை தேசிய சேமிப்பு வங்கியின் கிளை முகாமையாளர் ஏ.எம். சித்திக் அவர்களின் ஆலோசனைக்கமைவாக இப்பாடசாலையின் பிரதி அதிபர் ஏ.எம். தாஹாநழீம் அவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதன் ஆரம்பக்கட்ட நிகழ்வாக தரம் 5ஐச் சேரந்த மாணவர்களுக்கு தேசிய சேமிப்பு வங்கியினால் உண்டியல் மற்றும் எழுதுகருவிகளும் வழங்கப்பட்டு ஆரம்பிக்கப்பட்டதுடன் தரம் 5ஆம் வகுப்பிற்கு கற்பிக்கும் ஆசிரியர்களான AM. ஜவாஹிர் மற்றும் AB. பரீதா ஆகியோரும் பங்குபற்றியிருந்தார்கள்.

0 comments :
Post a Comment