முஸ்லிம்கள் தமது உரிமைக்கான கட்சி எது அரசாங்கத்திடமிருந்து எதையும் பெற்றுத்தரும் கட்சி எது என்று புரியாமல்
குழம்பியுள்ளதானாலேயே முஸ்லிம் காங்கிரஸ் அரசால் இன்று அவமதிக்கப்படுகிறது அல்லது அவமதிக்கபடுவதாக நாடகம் நடக்கிறது என முஸலிம் மக்கள் கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்தார். கல்முனையில் நடைபெற்ற கட்சியின் சம்மாந்துறை ஆதரவாளர்களுடனான சந்திப்பிலேயே இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.
அவர் தொடர்ந்து கூறியதாவது,
நவநீதம் பிள்ளையிடம் இலங்கை முஸ்லிம்களின் நிலை பற்றி எமது கட்சியும், நல்லாட்சிக்கான இயக்கமும், முஸ்லிம் காங்கிரசின் செயலாளருமே அறிக்கைகளை சமர்ப்பித்தனர். அதையும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், தான் கொடுக்கவில்லை, ஹசனலியே கொடுத்ததாகவும் அவரை காட்டிக்கொடுத்திருந்தார்.
இந்த நிலையில் நாட்டை காட்டிக்கொடுத்ததாக எம் இரு கட்சிகள் மீதும் எவரும் பழி போடாமல் முஸ்லிம் காங்கிரஸ் மீதே பழி போடப்பட்டுள்ளது. இவ்வாறு பழி சொல்பவர்;களும் அரசாங்கத்தின் அனைத்து நலன்களையும் அனுபவித்துக்கொண்டு அரசாங்கத்தின் மீது பழி போடுவது சரியா என்றுதான் கூறியுள்ளார்கள்.
இதனை வைத்துப்பார்க்கும் போது நமது வீட்டில் ஒருவர் சாப்பிட்டுக்கொண்டே அதாவது நக்கு தின்று கொண்டே நமது வீட்டைப்பற்றி அடுத்த வீட்டாரிடம் பற்றி வைத்தால் நமக்கு என்ன ஆத்திரம் வருமோ அதே ஆத்திரம்தான் அரசில் உள்ளவர்களுக்கும் ஏற்பட்டுள்ளது. ஆனால் பள்ளிவாயல் உடைப்பை தொடர்ந்து எமது கட்சி அரசாங்கத்திலிருந்து வெளியேறிய பின் நவிப்பிள்ளையிடம் அறிக்கை சமர்ப்பித்ததால் எம்மையும் நல்லாட்சிக் கான இயக்கத்தையும் எவரும் குறை கூறவில்லை.
இன்று முஸ்லிம்கள் தமது உரிமைகளும் பாதுகாக்கப்பட வேண்டும் அதே வேளை தமது தலைவர்கள் அமைச்சர்களாகவும் வரவேன்டுமென்று நினைப்பது கூளுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை என்பதைப்போன்றதுதான். இது விடயத்தில் நமது சகோதர தமிழ் மக்களைப்பார்த்தாவது அரசியலை கற்றுக்கொள் ளாமல் இருப்பதுதான் கவலையானது. அவர்கள் தமது உரிமைக்குரிய கட்சியாக தமிழ் தேசிய கூட்டமைப்பை பார்க்கிறார்கள்.
அரசிடமிருந்து பிச்சை பெற்றுத் தரும் கட்சியாக அமைச்சர் டக்ளசினதும் பிள்ளையானினதும் கட்சிகளை பார்க்கிறார்கள். தமிழ் மக்கள் த. தே சுட்டமைப்பிடமிருந்து மத்திய அரசாங்கத்தின் அமைச்சர்களை எதிர் பார்க்கவில்லை. ஆனால் எமது சமூகம் முஸ்லிம் சமூகத்தி;ன் உரிமைக்கான கட்சிகளை பார்க்காமல் அரசிடம் சோரம் போயுள்ள மு. காவே உரிமைகளையும் பெற்றுத் தர வேண்டும், அமைச்சர்களாகவும் இருக்க வேண்டும் என்றும் எதிர் பார்த்து இரண்டும் கெட்டான் நிலையில் உள்ளது.
எந்தப்பள்ளிவாயலும் தாக்கப்படவில்லை என அரசாங்கம் பாராளுமன்றத்தில் கூறிய போது மௌனமாக இருந்து அதனை ஆமோதித்த முஸ்லிம் காங்கிரஸ் மறைமுகமாக நவநீதன் பிள்ளையிடம் அறிக்கை சமர்ப்பித்தததைத்தான் பேரினவாதம் கண்டித்துள்ளது. இது பற்றி பாராளுமன்றத்திலேயே இவர்கள் அறிக்கை விடுத்திருந்தால் அது அப்போதே பேசு பொருளாக இருந்திருக்கும்.
அத்துடன் தேர்தல் காலத்தின் போது ஜனாதிபதிக்கும் ஹக்கீமுக்கும் முரண்பாடு வருவதாக செய்திகள் வெளியாவது என்பதை நாம் அடிக்கடி கண்டுள்ளோம். கடந்த கிழக்கு மாகாண சபை தேர்தல் காலத் திலும் இவ்வாறுதான் செய்திகள் வந்தன. தேர்தல் முடிந்ததும் எல்லோரும் உட்கார்ந்து அலறி மாளிகையில் புரியாணி சாப்பிடுவார்கள் என்பது எமக்குத் தெரியும்.
கடைசியில் இந்தச்செய்திகளை வைத்து உணர்ச்சிவசப்பட்டு முஸ்லிம் காங்கிரசுக்கு அளிக்கும் வாக்குகள் இன்னுமின்னும் பள்ளிவாயல்கள் உடைப்பிற்கே இட்டுச்சென்ற பின் சமூகம் சந்திகளிலும் பொந்துகளிலும் நின்று கொண்டு வழமை போன்று ஒப்பாரி வைக்கும் என்றார்.
இச்சந்திப்பில் கட்சியின் சம்மாந்துறை இணைப்பாளர் சஹீலும் கலந்து கொண்டார்.
0 comments :
Post a Comment