எம்.எம்.ஜபீர்-
பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் தேசிய அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் காரைதீவு பிரதேச செயலகப் பிரிவிலுள்ள கிராம மக்களை வலுவூட்டும் உபகார மற்றும் நடமாடும் சேவைகள் நேற்று இடம்பெற்றன.
காரைதீவு பிரதேச செயலாளர் எஸ்.ஜெகராஜன் தலைமையில் மாவடிப்பள்ளி கமுஃஅல்-அஸ்ரப் வித்தியாலயம், காரைதீவு கமுஃஆர்.கே.எம்.பெண்கள் பாடசாலை ஆகியவற்றில் உபகார மற்றும் நடமாடும் சேவைகள் நடைபெற்றது.
இதன்போது கரைதீவு பிரதேச செயலகப் பிரிவில் நீண்ட காலப் பிரச்சினைகளாகக் காணப்பட்ட காணி, மீன்பிடி, தேசிய அடையாய அட்டை, கடவுச் சீட்டு, காலங்கடந்த பிறப்பு, இறப்பு, திருமண பதிவுகள் போன்ற பல பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வு பெறப்பட்டது.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன் உட்பட அரச, திணைக்கள உயர் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டர்.
.jpg)
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment