இலங்கைப் பொலிஸ் திணைக்களத்தினால் களுவாஞ்சிக்குடி பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஏ.எஸ்.பி. ஜெயந்த ரத்நாயக்காவின் ஆலோசனையின் பேரில் காத்தான்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி அஜித் பிரசன்னவின் முயற்ச்சியின் பயனாக பொது மக்களின் நன்மை கருதி மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் பல்வேறுபட்ட முறைப்பாடுகளை விசாரணை செய்ய புதிதாக அமைக்கப்பட்ட சிறு குற்றப் பிரிவுக்கான காரியாலயம் திறந்து வைக்கும் நிகழ்வு கடந்த 15 - சனிக்கிழமை காத்தான்குடி பொலிஸ் நிலைய சிறு குற்றப் பிரிவு பொறுப்பதிகாரி ரணசிங்க தலைமையில் இடம்பெற்றது.
இதன் போது காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில்; அமைக்கப்பட்ட சிறு குற்றப் பிரிவுக்கான புதிய காரியாலயம் களுவாஞ்சிக்குடி பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஏ.எஸ்.பி. ஜெயந்த ரத்நாயக்காவினால் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் களுவாஞ்சிக்குடி பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஏ.எஸ்.பி. ஜெயந்த ரத்நாயக்கா, காத்தான்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி அஜித் பிரசன்ன, காத்தான்குடி பொலிஸ் நிலைய சிறு குற்றப் பிரிவு பொறுப்பதிகாரி ரணசிங்க உட்பட பொலிஸ் உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
.jpg)
0 comments :
Post a Comment