இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள தீர்மானம் மீதான விவாதம் இன்று (26) இடம்பெற்றது.
அமெரிக்கா, பிரித்தானியா, வட அயர்லாந்து, மொன்டன்கரோ, மெசிடோனியா மற்றும் மொரிஷீயஸ் ஆகிய நாடுகளினால் இந்த தீர்மானம் முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தீர்மானம் மீதான விவாதத்தில் இலங்கைக்கு ஆதரவு, எதிர்ப்பு தெரிவித்துள்ள நாடுகள் இணைந்து கொள்ளவுள்ளன.
இலங்கை சார்பில் ஐக்கிய நாடுகள் அமைப்பின் ஜெனீவாவிற்கான இலங்கை வதிவிடப் பிரதிநிதி ரவிநாத் ஆரியசிங்க உள்ளிட்ட குழுவினர் கலந்து கொள்ளவுள்ளனர்.
இந்நிலையில் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், மஹிந்த சமரசிங்க, நிமல் சிறிபாலடி சில்வா ஆகியோர் ஜெனீவாவில் உள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள தீர்மானம் மீதான வாக்கெடுப்பு எதிர்வரும் 28ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

0 comments :
Post a Comment