ஜனாதிபதியின் மஹிந்த சிந்தனை வேலைத்திட்டத்தின் கீழ் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின்-2014ம் ஆண்டு தேசிய அபிவிருத்தி வேலைத்திட்டங்களில் ஒன்றாக 'நிலையான இன்பம் வழமான தாயகம்' எனும் தாரக மந்திரத்துக்கு அமைவாக சம்மாந்துறைப் பிரதேசத்திலுள்ள விளினையடி – 01,02,03 மக்களுக்கான கிராமிய மக்கள் ஒன்று கூடலும் நடமாடும் சேவையும் நாளை (20) காலை 8.00 மணி தொடக்கம் பிறிபகல் வரைக்கும் விளினையடி கிராமோதைய சபைக் கட்டிடத்தில் நடைபெறவுள்ளது.
சம்மாந்துறைப் பிரதேச செயலாளர் ஏ.மன்சூர் தலைமையில் நடைபெறவுள்ள இந்த நடமாடும் சேவை நிகழ்வில் அரசியல் தலைவர்கள், கட்சிப் பிரமுகர்கள், திணைக்களங்களின் தலைவர்கள் உட்பட பலர் கலந்து கொள்ளவுள்ளனர்.
இந்த நடமாடும் சேவையில் பின்வரும் நிறுவனங்களின் சேவைகள்

நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளன.
அதாவது மீன்பிடித் திணைக்களம், காணிப் பிரிவு, திட்டமிடல், சமுர்த்திப் பிரிவு, பதிவாளர் பிரிவு, ஆட்பதிவுத் திணைக்கள சேவை, மோட்டார் போக்குவரத்து திணைக்கள சேவை, புவிச்சரிதவியல் திணைக்களத்தின் சேவை, சமூக சேவை திணைக்கள சேவை, கால்நடை வைத்திய அதிகாரி சேவை, கலாசார திணைக்கள சேவை, சுகாதார திணைக்கள சேவை, நீர்பாசன திணைக்கள சேவை, தேசிய நீர்வழங்கல் அபிவிருத்திச் சபையின் சேவைகள், இலங்கை மின்சார சபையின் சேவை, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக சேவை, வங்கிச் சேவை, அரச மரக்கூட்டுத்தாபன சேவை என்பன இடம் பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளன.

0 comments :
Post a Comment