கல்முனை மாநகர சபையின் முன்னாள் மேயர் சிராஸ் மீராசாஹிப் எதிர்வரும் 24ம் திகதி சாய்ந்தமருதி்ல் வைத்து தேசிய காங்கிரஸ் கட்சியில் உத்தியோகபுர்வமாக இணைந்து கொள்ளவுள்ளார்.
ஆயிரக்கணக்கான தனது ஆதரவாளர்களுடன் சகிதம் தேசிய காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாஉல்லாவுடன் இணையும் நிகழ்வு சாய்ந்தமருது ஹோட்டல் ஒன்றில் இடம்பெறவுள்ளது.
சிராஸ் மீராசாஹிபின் கட்சி மாற்றம் அம்பாரை மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரசுக்கு பாரிய வீழ்ச்சியை ஏற்படுத்தும் என அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். அதுமட்டுமல்ல முஸ்லிம் காங்கிரசுக்கு எதிரான தரப்பினர் மூன்று முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களைப் பெறுவதற்கான வாய்ப்பும் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment