சாகீர் ஏ ரஹ்மான்-
நாரம்மல பொலிஸ் பிரிவில் மெட்டியாகன பகுதியில் இன்று (18) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் நால்வர் வபாத்தாகியுள்ளனர். இந்த விபத்தில் மாத்தளை வரகாமுறையை சேர்ந்த நான்கு வாலிபர்களே (படங்கள்) வபாத்தாகியுள்ளனர். இவர்களில் இருவர் சகோதரர்களும் ஒருவர் அவர்களின் உறவினருமாவார் . முச்சக்கர வண்டியை செலுத்தி சென்ற நாஸிக் என்ற வாலிபர் வரகாமுறை- உக்குவளை பிரதேச சபையின் பிரதி தலைவரான நகீர் என்பவரின் மகனாவார் .
இபோச பஸ் ஒன்றும் முச்சக்கர வண்டியும் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இவ்விபத்து ஏற்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார் .இவர்கள் 21 வயதுக்கும் 24 வயதுக்கும் உட்பட்டவர்கள் ஆவர் . வெளிநாட்டு ஒன்றில் இருந்து நாடு திரும்பிய தனது சகோதரனை அழைத்து வரும்போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது . விபத்தை அடுத்து பஸ் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார் என்று அறிவிக்கப் பட்டுள்ளது.

0 comments :
Post a Comment