த.நவோஜ்-மட்டக்களப்பு ஓட்டமாவடிப் பிரதேசத்தில் ஏழு எருமை மாடுகளுடன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட மூவரும் ஜம்பது ஆயிரம் ரூபாய் காசுப் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
சட்ட விரோதமான முறையில் அறுவைக்காக எருமை மாடுகளை மாட்டுத் தொழுவத்தில் வைத்திருந்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் இவர்கள் வாழைச்சேனை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு வாழைச்சேனை மாவட்ட நீதிவான் நீதிமன்ற நீதிபதி எம்.ஜ.எம்.றிஸ்வி முன்னிலையில் செவ்வாய்கிழமையன்று ஆஜர் செய்யப்பட்டனர்.
இதன்போது வழக்கினை கேட்டறிந்து கொண்ட நீதிபதி இவர்களை தலா ஜம்பதினாயிரம் ரூபாய் காசுப் பிணையில் விடுதலை செய்யுமாறு நீதிமன்றத்தினால் உத்தரவிடப்பட்டது.
அத்துடன் கைப்பற்றப்பட்ட மாடுகளை அறுவைக்கு பயன்படுத்த வேண்டாம் என எச்சரிக்கை செய்து விடுவிக்கப்பட்டது.
இந்த வழக்கினை நீதிமன்றம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 3ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

0 comments :
Post a Comment