மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று கடந்த 8ம் தேதி, 239 பயணிகளுடன் மாயமானது. பல்வேறு நாடுகள் மாயமான விமானத்தை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இந்நிலையில், இந்திய பெருங்கடலின் தெற்கு பகுதியில் விமானத்திற்கு தொடர்பான உடைந்த பாகங்களை போன்ற பொருட்கள் மிதப்பதை, செயற்கைகோள் மூலம் கண்டறியப்பட்டுள்ளதாக ஆஸ்திரேலிய பிரதமர் டோனி ஆபாட் கூறியுள்ளார். இதையடுத்து, அந்த பொருட்கள் குறித்து ஆய்வு நடத்த, ஆஸ்திரேலியா ஒரு விமானத்தை அனுப்பி உள்ளது.
இது குறித்து டோனி கூறுகையில், மலேசிய விமானம் மாயமாகி இரண்டு வாரங்கள் கழித்து விமானத்தின் பாகங்கள் போன்ற பொருட்கள் கிடக்கும் தகவல் செயற்கைகோள்கள் மூலம் கிடைத்துள்ளன.
அதற்கும் மாயமான விமானத்திற்கும் தொடர்பு இருக்கலாம். ஆஸ்திரேலிய விமானப்படையான ஆரியன் அந்த பொருட்களை பார்க்க 3 கண்காணிப்பு விமானங்களுடன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்றார்.
அதற்கும் மாயமான விமானத்திற்கும் தொடர்பு இருக்கலாம். ஆஸ்திரேலிய விமானப்படையான ஆரியன் அந்த பொருட்களை பார்க்க 3 கண்காணிப்பு விமானங்களுடன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்றார்.
டோனி அது என்ன பொருட்கள், அவை எங்கு காணப்பட்டன என்பதை தெரிவிக்கவில்லை.
மாயமான மலேசிய விமானத்தை இந்திய பெருங்கடலின் தெற்கு பகுதியில் தேடும் பொறுப்பை ஆஸ்திரேலியா ஏற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
.jpg)
0 comments :
Post a Comment